நினைவெல்லாம் நீயடா
இயக்குனர்- ஆதிராஜன்
நடிகர்கள் – பிரஜயன் , சினாமிகா , ரெடின் கிங்க்ஸ்லி
இசை – இளையராஜா
தயாரிப்பு – ராயல் பாபு
கதையின் நாயகன் பள்ளி பருவத்தில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது காதலி ஒரு நாள் தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.இந்த நிலையில் பிரிந்து சென்ற பெண்ணை பென்னை நினைத்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் அவனை விரும்பும் சொந்த அத்தை மகளை திருமனம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அதன்படி, தனது அத்தை மகளை பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார். திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில், அவர் எதிர்பார்த்தது போல், அவரது காதலி அவரை தேடி வருகிறார். இதன் பின் தனது பள்ளி பருவத்தில் பிரிந்த காதலியுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட மனைவியுடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பதே இந்தப் படத்தின் கதை.
முதல் காதல் எப்போதும் நம் நினைவில் இருந்து அகலாது, என்பதை உணர்த்தும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், அந்த முதல் காதல் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அப்படி இருந்தாலும் அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்ற கருத்தை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.
பிரஜின் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு இந்தப் படத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றிறுக்கிறது. பிரிந்த காதலிக்காக ஏக்கத்தோடும், சோகத்தோடும் காத்திருக்கும் ஒரு இளைஞனின் நிலையை தனது நடிப்பில் சிறப்பக வெளிக்காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கிறது,மேலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கிறது.
மேலும் பள்ளி பருவத்தில் நடித்திருக்கும் ரோஹித் மற்றும் யுவலக்ஷ்மி இருவரும் இந்தப்படத்தை பெரிதும் தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வரும் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே காதல் என்ற உணர்வை கொடுப்பதோடு, ரசிக்கவும் வைக்கிறது. பிரஜினின் நண்பராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி தனிமனிதராக சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்ஷத்ரா ஆகியோர் ஆங்காங்கே ஸ்கோர் செய்கின்றனர்.
பிரஜினின் அத்தை மகளாக, அவரை ஒருதலையாக காதலிக்கும் மனிஷா யாதவ், தனது வெறித்தனமான காதலை வெறித்தனமான நடிப்பு மூலம் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது, பல இடங்களில் தடுமாற வைத்திருக்கிறது. படத்தின் நாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, முதிர் கண்ணியாக இருக்கிறார். இவருக்காகவா பிரஜின் இத்தனை வருடங்கள் காத்திருந்தார், என்று அவர் மீது நமக்கு பரிதாபம் வரும் போது, சினாமிகா ஒரு உண்மையை சொல்லி நமக்கு ஆறுதல் அளிக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை அளவு.ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பளிச்சென்றும் படாக்குவதற்காக ஏகப்பட்ட விளக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த விளக்குகளை மறைத்து வைத்து காட்சிகளை படமாக்காமல், பின்னணியாக கொண்டு படமாக்கியிருப்பது கண்களை கூச வைத்துவிடுகிறார்.
காதல் கதை வைத்து எத்தனை படங்கள் வந்தாலும் அது நன்றாக இருந்தால் அதற்கான மதிப்பே தனி எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் நல்ல காதல் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே எப்பொதும் பெரிய வரவேற்பு இருக்கும்.
மொத்தத்தில், ‘நினைவெல்லாம் நீயடா’ படம் முன்னாள் காதலர்களின் கஷ்டத்தை உணரவைக்கிறது
Rating 3/5