RMV அய்யாவின் நினைவுகள்

RMV அய்யாவின் நினைவுகள்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா(Muktha Srinivasan) அடிக்கடி சந்திக்கும் ஆலோசகர்

அவர் அறிஞர் அண்ணாவின் காரியதரிசியாக ஆரம்பத்தில் வேலை பார்த்தார்.
பின் புரட்சிதலைவர் கேட்டு கொண்டபடி அண்ணா அவர்கள் தன் காரியதரிசியை அவருக்கு உதவியாக அனுப்பினார் . அன்று முதல்”அவர் புரட்சி தலைவருக்கு பக்கபலமாக மூச்சு உள்ள வரை திரைத்துறை அரசியல் என பல விஷயங்களில் ஊன்று கோலாக திகழ்ந்தார்.

சிறந்த இலக்கியவாதி. சிறந்த கதாசிரியர் மற்றும் திரைக்கதை அமைப்பில் மிக திறமைசாளி. MGR படங்கள் வெற்றிக்கு இவர் பங்கு மிக பெரியது

தேவர் பிலிம்ஸ் போல
சத்யா மூவீஸ் கதை இலாகா.. மிக பிரபலம்

தமிழ் பேராசியர் நா. பாண்டுரங்கன்(New College) மா.வே லடக்ஷ்மணன், துரைராஜ், சுந்தரராஜன், கணக ஷன்முகம், ஜெகதீசன் இப்படி பல
மிக திறமையான கதாசிரியர்கள் பட்டாளம் திரைக்கதை விவாதங்களில் இருப்பார்.

80-90 களில் P.Vasu, Udhayakumar, KS Ravi kumar படங்களில் இவர்களில் பலர் கதை விவாதங்களில் பணிபுரிந்தார்கள்

MGR பிறகு ரஜினிகாந்த் கமலஹாசன் அவர்களுக்கு பல வெற்றிபடங்கள் RMV அய்யா தந்தார்

Sathya movies school of Making Cinema என்று தமிழ் திரையுலகம் வியந்த காலம் இருந்தது.

அப்படிபட்ட ஜாம்பவான் மறைவுக்கு

முக்தா ரவி மற்றும்
முக்தா பிலிம்ஸாரின்
இதய பூர்வ அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *