உலகின் மிக ஹேண்ட்ஸமான நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்!

உலகின் மிக ஹேண்ட்ஸமான நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்!

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸூக்காக பெயர் பெற்றவர். கிராவெனாக அவரது பாத்திரத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டது ரசிகர்களை மேலும் ஆச்சரியபட வைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் மிகவும் ஹேண்ட்ஸமான நடிகர் என பெயர் பெற்ற இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் தன்னை சென்சேஷனல் நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கடுமையான வொர்க்அவுட் மற்றும் கண்டிப்பான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றி அவர் கச்சிதமான, வலிமையான இந்த உடலமைப்பைப் பெற்றுள்ளார். இதுதான் மார்வெல் கதாபாத்திரத்தை அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடனும் உருவாக்க அவருக்கு உதவியது.

சமீபத்திய உரையாடலில் இதுபற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

கிராவன் கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமான, உடல் இயல்பை கொண்டு வர டெய்லர்-ஜான்சன் தனிப்பட்ட பயிற்சியாளர் டேவிட் கிங்ஸ்பரி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் நேட் ஷ்மிட் ஆகியோர் உதவியுடன் கிட்டத்தட்ட 35 பவுண்டுகள் தசையை உருவாக்க பல மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளார். “காமிக்ஸில் கிராவன் பிரம்மாண்டமானவர்” என்கிறார் டெய்லர்-ஜான்சன். மேலும், “அவரது வயிறு மற்றும் கைகள் அவரது உடையின் ஒரு பகுதியாகும். காமிக் புத்தகங்களின் கதாபாத்திரம் திரையில் வரும்போது அவரது உடல் தோற்றத்தையும் ரசிகர்கள் அப்படியே எதிர்பார்ப்பார்கள். அதனால், இந்தக் கதாபாத்திரத்தை எப்படி நம்பும்படி செய்வது என்ற பொறுப்பும் என்ககு இருந்தது. என் உடலின் மாற்றம் உடையில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது” என்றார்.

“உடலை மாற்றுவது எளிதானது கிடையாது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்ற பிரம்மாண்டத்தை உடலில் கொண்டு வர பல வருடங்கள் ஆகும். ஆனால், எங்களிடம் ஆறு மாதங்கள் மட்டுமே இருந்தன” என்றார்.

அதன்பிறகு, டெய்லர்-ஜான்சன் ஜிம்மில் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தார். “எங்களிடம் ஒரு பெரிய டிரக் இருந்தது. அதில் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு சென்றேன்” என்கிறார் கிங்ஸ்பரி. “நாங்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை எடைப் பயிற்சி செய்தோம் – அப்பர் பாடி, லோயர் பாடி, அப்பர் பாடி, லோயர் பாடி ஸ்பிலிட்”.

மேலும் அவர் கூறியதாவது, “மிகவும் குறைந்த நேரமே எங்களிடம் இருந்தது. ஆனால், அதிகப்படியான பயிற்சியானது அதிகப்படியான தசை சேதத்தை உருவாக்கும். அதனால், மிகவும் கவனமாக இருந்தோம்” என்றார்.

‘கிராவன் தி ஹன்டர்’ என்பது மார்வெலின் மிகச் சிறந்த வில்லன்களில் ஒருவர். அவர் எப்படி உருவானார் என்பதற்கான ஆக்ஷன்-பேக்ட், ஆர்-ரேட்டட் கொண்ட தனிக்கதை. ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது இரக்கமற்ற கேங்க்ஸ்டர் தந்தையான நிகோலாய் க்ராவினோஃப் (ரஸ்ஸல் குரோவ்) உடனான சிக்கலான உறவைக் கொண்ட க்ராவெனாக நடித்துள்ளார்.

இயக்கியவர் ஜே.சி. சான்டோர். இப்படத்தில் அரியானா டிபோஸ், ஃப்ரெட் ஹெச்சிங்கர், அலெஸாண்ட்ரோ நிவோலா, கிறிஸ்டோபர் அபோட் மற்றும் ரஸ்ஸல் க்ரோவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘கிராவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *