இயக்குனர்_பேரரசு _ சட்டசபைக்குள் அனுப்புவதற்காகத்தான் MLAக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்!

இயக்குனர்_பேரரசு

சட்டசபைக்குள் அனுப்புவதற்காகத்தான் MLAக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! அதேபோல் பாராளுமன்றத்திற்குள் அனுப்புவதற்காகத்தான் எம்பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்!
ஆஊன்னா வெளிநடப்பு செய்வதற்கல்ல!
சபைக்குள் முடிந்தவரை தன் கருத்துக்களை சொல்லி போராட வேண்டும். இல்லையென்றால் அங்கு என்னதான் நடக்கிறது என்று இறுதிவரை இருந்து பார்க்க வேண்டும்.
அடிக்கடி இப்படி வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களை அவமதிப்பதற்கு சமம்!
மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று, விமான டிக்கெட் போட்டு,இருக்க வசதியான அறை குடுத்து, உண்ண உணவு கொடுத்து இதெல்லாம் எதுக்கு வெளிநடப்பு செய்யவா?
இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
வெளிநடப்பு செய்து சாதித்ததாய் ஒரு நிகழ்வும் இல்லை.
வெளி நடப்பு உரிமை அல்ல!
அது பொறுப்பின்மை!
இதுவும் ஒரு ஜனநாயக துரோகம்!
அடிக்கடி வெளிநடப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வேண்டும்.

இயக்குனர்_பேரரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *