
கராத்தே கிட் – படங்களைப் பற்றி ரால்ஃப் மாக்கியோ பேசும் போது, “இந்தக் கதைக்கரு காலம் தாண்டி நிலைத்திருக்கும்” என்கிறார்.
கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கும் வேளையில், ரால்ஃப் மாக்கியோ மீண்டும் டேனியல் லாருசோவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த முறை, ஜாக்கி சானின் கதாபாத்திரமான திரு ஹானுடன் இணைந்து, ஹானின் உறவினர் லி ஃபாங்-ஐ, நியூயார்க் நகரில் நடைபெறும் ஒரு மிக முக்கியமான போட்டிக்காக கராத்தே மற்றும் குங்க்ஃபூ ஆகிய இரண்டும் கலந்த பயிற்சிகளை அளிக்கிறார். இந்தத் தொடரில் மீண்டும் பங்கேற்கும் அனுபவம், கடந்த காலத்தைப் போற்றும் விதமாகவும், கதையை முன்னோக்கி நகர்த்தவும் தான் என்று ரால்ஃப் கூறுகிறார். “இந்தத் தொடரையும், இந்தக் கதாபாத்திரத்தையும் பாதுகாப்பதில் நான் எப்போதும் கவனமாக இருந்திருக்கிறேன்.மேலும் இந்தக் கதாபாத்திரங்களின் வளர்ச்சியும், முதல் படத்தின் கருவும், இன்னும் ஒவ்வொரு தலைமுறையையும் தாண்டி வென்று கொண்டே தான் செல்கின்றன.”
ஜாக்கி சானுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து அவர் கூறும்போது, “ஜாக்கி சானுடன் பணியாற்றுவது எனக்கும் ஒரு கற்றுக்கொள்ளும் அனுபவம். ஒரு கலைஞராகவும் எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. சினிமா மற்றும் கலைகளில் உன்னத நபரான அவர், ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகளில், அவருடைய ஈடுபாடுக்கு அளவே இல்லை. இதனால் தான் ‘இதை நான் எப்படி செய்யணும்!’ என அவர் சொல்வதை மறுப்பேதும் சொல்லாமல் ‘சரி!’ என்று கேட்கிறேன்.” என்றார்.
அடுத்த தலைமுறை கதாநாயகனைப் பற்றியும் ரால்ஃப் மிகுந்த உற்சாகத்துடன் பேசுகிறார். லி ஃபாங் கதாபாத்திரத்தில் நடிக்கும் புது முகம் பென் வாங்கின் திறமையை அவர் புகழ்கிறார். “அவருடைய உழைப்பும், நடிப்புக்கு ஆயத்தமாக இருப்பதும், எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத தன்மையும் தான் –அவர் இந்த தலைமுறையின் கராத்தே கிட்!” ஆக இருக்கிறார் என்று புகழ்கிறார்.
தலைமுறையாக தொடர்ந்து வரும் திரு மியாகியின் உணர்ச்சிமிக்க நடிப்பும் இதில் இருப்பதையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.“திரு ஹானுக்கு லி ஃபாங் எவ்வளவு முக்கியமோ அதேபோல “டேனியல் லாருசோ எப்போதும் திரு மியாகிக்கான மரியாதையையும் கௌரவத்தையும் உணர்கிறார்,” என்கிறார் மாக்கியோ. அதில் ஒரு ஒற்றுமை இருப்பதையும் பார்க்கலாம். மேலும் இன்னொரு கராத்தே கிட்க்கு எங்கேயோ சிறு உதவி தேவைப்படும் போது, மியாகியின் ஞானத்தையும் மரபுகளையும் பகிர்வது சரியான தேர்வாகவே இருக்கும்.” என்கிறார்.
கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் மே 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.