லவ் மேரஜ் படம் எப்படி இருக்கு?

லவ் மேரஜ்

இயக்குனர்: சண்முக பிரியன்
நடிகர்கள்: விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ்
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – குமார் கிருஸ்னசாமி , ஸ்வேதா ஸ்ரீ

ஒருவர் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறார், ஏற்கனவே தனது திருமண வயதை கடந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அவர் பெண் வெறுப்பு மற்றும் சாதி வெறி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர்களின் சாதி மற்றும் வகுப்பிற்குள் சரியான காதலனைக் கண்டுபிடிக்காததால் அவர்கள் தங்கள் விதிகளைத் தளர்த்தியுள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமண அமைப்பில் உள்ள பல குடும்பங்களின் நிலைமை இதுதான். மேலும் அவரது வயது, நரைத்த முடி, வழுக்கை விழும் வதந்திகள் மற்றும் அவரது தொழில் காரணமாக பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெகுதூரம் பயணம் செய்து வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பென்னுடன் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைப் பற்றிய படத்திற்கு காதல் திருமணம் என்று பெயரிடுவதில் உள்ள முரண்பாடு என சில காட்சிகள் உள்ளது. இந்தப் படம் கொரனா தொற்றுநோய் காலத்தில் நடக்குமாறு அமைந்துள்ளது, அந்த திருமணத்தால் நடக்கும் நிகழ்வே மொத்த படமாக இருக்கிறது,

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு திருமணம் நடக்காமல் இருக்கும் ஒரு 30 வயது தோற்றத்தில் நடித்துள்ளார், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார் அவருக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் தான்,

மற்ற கதாபாத்திரங்களான மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், குறிப்பாக ரமெஷ் திலக் மற்றும் அருள்தாஸ் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது.

லவ் மேரேஜ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை வலுசேர்த்து இருக்கிறது. பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை என இரண்டுமே சிறப்பாக உள்ளது, படம் குறைவான மனிதர்களை கொண்ட படம் என்பதால் ஒளிப்பதிவாளர் மதன் கிரிஸ்டோபர் அதற்குள் எப்படி ரசிக்க வைக்க முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார்,

முதல் பாதியில் குடும்பம் திருமணம் என வழக்கமான சினிமா போலவெ கடந்து செல்கிறது , ஆனால் இரண்டாம் பாதியில் தான் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் அப்போது தான் பல இடங்களில் விக்ரம் பிரபு ஸ்கோர் செய்கிறார். படத்தில் தேவையில்லாமல் நிறைய காட்சிகள் வைக்காமல் அழகாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். மற்றபடி குடும்பத்துடன் பார்க்கும் ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக தான் இருக்கிறது. இறுகப்பற்று, டாணாகாரன் வரிசையில் இந்த படமும் விக்ரம் பிரபுவுக்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ஆக்சன் படங்களே வெளியாகி வரும் நிலையில் இதுபோன்ற குடும்ப படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த லவ் மேரஜ் ஃபன் நிறைந்த குடும்பப்படம்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *