
“நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்கு புல்லரித்து விடும் ; சிலாகிக்கும் பன் பட்டர் ஜாம் நாயகி பவ்யா ட்ரிக்கா”
நாயகி ஆத்யா பிரசாத் பேசும்போது,
“பன் பட்டர் ஜாமில் ஃபேமிலி, லவ், பிரண்ட்ஷிப் என எல்லாமே இருக்கும். எல்லா தரப்பு மக்களையும் இந்த படம் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.
நாயகி பவ்யா ட்ரிக்கா பேசும்போது,
“என் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தில் எல்லா வயதை சேர்ந்த நபர்களும் இருகிறார்கள். எனக்கு இந்த பன் பட்டர் ஜாம் பட வாய்ப்பு வந்தபோது அதை சொன்னதும் உடனே எல்லோருமே ஆரவாரமாக சூப்பர் என்று சொன்னார்கள். அதை பார்த்ததுமே எனக்கு ஒரு பாசிட்டிவான உணர்வு ஏற்பட்டது. கட்டாயம் ரசிகர்களுக்கும் இது பிடிக்கும். தவிர, இந்த படத்தின் கதை பர்சனல் ஆக எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானதாக இருந்தது.. இயக்குனர் ராகவ் ஒரு பர்ஃபெக்சனிஸ்ட். சின்ன சின்ன விஷயங்களை கூட டீடைலாக சொல்லி இருக்கிறார். சார்லி சாரை திரையில் பார்க்கும்போதே ஒரு சந்தோசமாக இருக்கும். ஒரு ஆன்மீகவாதியும் கூட. அற்புதமான நடிகர். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இருவருடனும் நடித்தபோது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்கு புல்லரித்து விடும். தியா தியா என்னுடைய ஃபேவரைட் பாடல். பப்பு, மைக்கேல், ஆத்யா எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். ராஜூவைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவுட்ஸ்டாண்டிங். காட்சிகளில் நடிக்கும் போது வெளியிலிருந்து என்னை சிரிக்க வைப்பார். எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ராஜூவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது” என்றார்.