
ஓஹோ எந்தன் பேபி
இயக்கம் – கிருஷ்ணகுமார் ராமகுமார்
நடிகர்கள் – விஷ்ணு விஷால், மிஸ்கின், ருத்ரா
இசை – ஜென் மார்ட்டின்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் productuon- விஷ்ணு விஷால், துரை
இயக்குனர் ஆக வேண்டும் என்கிற முயற்சியில் ஒருவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார், இந்நிலையில் ஒரு நடிகரை சந்தித்து அவருக்கு கதை சொல்கிறார். சொன்ன இரண்டு கதையுமே பிடிக்காமல் போக, ஏதாவது காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று தெரிவிக்கிறார். அந்த சமயத்தில் தன்னுடைய சொந்த காதல் கதையை நடிகரிடம் கூறுகிறார் . அது அவருக்கு பிடித்து போகவே இந்த கதையை படமாக எடுத்தால் நான் நடிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை உள்ளது, அதனை நாயகன் சரி செய்தாரா? இறுதியில் அவரது இயக்குனர் கனவு நனவானதா இல்லையா என்பதே இந்த “ஓஹோ எந்தன் பேபி” படத்தின் கதை .
இந்தப்படத்தில் ஒரு நடிகராகவே விஷ்ணு விஷால் நடித்துள்ளார். அவரின் இருப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
அறிமுக நாயகன் ருத்ரா எமோஷனல் காட்சிகளில் சிரமப்பட்டாலும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு புதுவரவு. இவர்கள் அனைவரையும் தாண்டி மிஸ்கின் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அந்த காட்சிகள் முழுவதையும் தன் வசப்படுத்துகிறார். நாயகனின் நண்பராக வரும் நிர்மல் பிள்ளை, சித்தப்பாவாக வரும் கருணாகரன் ஆகியோரும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், காட்சிகள் கலர் ஃபுல்லாக இருந்தது, மேலும் ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
படத்தில் தெரிந்த முகங்கள் என்றால் அது விஷ்ணு விஷால், மிஷ்கின் போன்ற சிலர் மட்டும் தான். இதுவே இந்த படத்திற்கு பெரிய பக்க பலமாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக மிதிலா பால்கர் மீரா என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். எமோஷனல் காட்சிகளிலும், வசனங்களிலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தப் படம் இன்றைய தலைமுறை காதலில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசுகிறது. ஈகோ மற்றும் புரிதல் இல்லாமல் ஒரு காதல் உறவு எப்படி உடைந்து, சிதைந்து போகிறது என்பதை நல்ல ஒரு திரை கதையின் மூலம் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார். பல காட்சிகள் புதிதாக இருப்பதால் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் இந்த “ஓஹோ எந்தன் பேபி” படத்தில் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சமில்லை .
Rating 3.3/5