
அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்;; பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
‘அட்ரஸ்’ படத்தின் பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
தமிழக-கேரள அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியை சொலலும் ‘அட்ரஸ்’ பட பாடல்.. வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என இரண்டு கதாநாயகிகள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் முன்னணி ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (கிரிஷ்.G) இசையமைத்துள்ளார். கிருஷ்ணகுமார்-வாசன் இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, தமிழரசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்
படம் பற்றிய இயக்குநர் இராஜமோகன் கூறும்போது, “1956ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கும் சேராமல் கேரளாவிற்கும் சேராமல் நடுவில் ஒரு சில கிராமங்கள் மாட்டிக் கொண்டன. எந்த மாநிலத்திலும் சேராமல் அடிப்படை உரிமையான ரேஷன் கார்டு, வாக்காளர அட்டை, ஆதர்ர் கார்டு கூட கிடைக்காமல் அந்த மக்கள் இரு மாநில அரசாலும் புறக்கணிக்கப்பட்டு ஒரு கடினமான வாழ்க்கையை 2016 வரை வாழ்ந்தனர்,
அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை அளித்து அவற்றை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூட, இரண்டு மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததின் பின்னணியில் கூட ஒரு அரசியல் இருக்கிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த ஒரு ஊரின் அழகியலையும் அந்த மக்களின் வலியையும் ஒரு பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளோம்” என்று கூறுகிறார்.
“மேகம் மூடிக் கொள்ளும்.. வானம் தேடிச்செல்லும்.. பூமி தலையில் தாங்கும் எங்க ஊருடா… ” என துவங்கும் இந்தப் பாடலில்
“எல்லைக்கோட்டை எவன்டா போட்டான்.. கோட்டை தாண்டி எவனும் வரலை..
நூறு சட்டம் நூறு திட்டம்.. எதுவும் இங்கே எட்டவில்லை..
யுத்தங்கள் இல்லை. ரத்தமும் இல்லை.. ஆனாலும் அகதியாக வாழ்கிறோம்..
நாங்கள் நாடோடி இல்ல.. ஓடோடி செல்ல.. நெஞ்சு பொறுக்குதில்ல..”
என்பது போன்று அந்த மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வரிகள் அமைந்திருக்கின்றன”
இந்தப் பாடலை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்டுவிட்டு, “இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயமாக சமூகத்திற்கு, மக்களுக்கு சென்று சேர வேண்டும்” என்று பாராட்டியதுடன் இன்று (ஜூலை 23) இந்த பாடலை வெளியிடுகிறார்.
.
எல்லா வளங்களும் இருந்தும் எதுவும் இல்லை என்கிற அந்த மக்களின் மனக்குறையை வெளிப்படுத்தும் இந்த பாடலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். செந்தில் கணேஷ், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
📧 johnmyson@gmail.com
📞 +91 94449 00048
X: @johnsoncinepro
Insta: @johnsoncinepro
FB: Johnson Pro