
சரண்டர்..!
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில், சென்னையின் திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் பிரபலம் ஒருவர் சரண்டர் செய்த கைத்துப்பாக்கி காணாமல் போகிறது
அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பயிற்சி துணை ஆய்வாளரான நாயகன் தர்ஷன் தலைமையிலான குழு ஈடுபடுகிறது. நான்கு நாட்களுக்குள் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தர்ஷனுக்கு, ரவுடி சுஜித் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும், காணாமல் போன துப்பாக்கியையும் கண்டுபிடித்தாக வேண்டும், என்ற இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வதே ‘சரண்டர்’.
நாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தலைமை காவலராக நடித்திருக்கும் லால், எதார்த்தம் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறார்,
வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். எதிரிகளை வேட்டையாடுவதும், போலீஸ்காரர்களையே மிரட்டுவது, மிரட்டல் ஆக உள்ளது.
முனிஷ்காந்த் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நடிகராகவே நடித்திருக்கும் மன்சூர் அலிகான், கெளசிக், சுந்தரேஸ்வரன் என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் ரேணு கோபால் தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கவுதமன் கணபதி,
காவல்துறை இயங்கும் விதம், காவல் நிலையத்தில் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் கவுதமன் கணபதி, இரண்டரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு படத்துடன் பார்வையாளர்களையும் பதற்றத்துடன் பயணிக்க வைத்து விடுகிறார்.
பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம், முழுமையான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சரண்டர்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
Rating 3.8/5