யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்நகைச்சுவையின் தலைவராகிய பிரம்மானந்தம் அவர்களுடன் இணையுகிறார்

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்
நகைச்சுவையின் தலைவராகிய பிரம்மானந்தம் அவர்களுடன் இணையுகிறார்

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறார்.

முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் பிறமகாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. பிரம்மானந்தம் சார் தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர். அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள புத்தகம் “நான் பிரம்மானந்தம்” என்பதை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார்.

இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு மனமுவந்த பேச்சில் கூறுகிறார்:

தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளது.

பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபு இணையும் குர்ரம் பாப்பி ரெட்டி படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான நகைச்சுவை விருந்தாக இருக்கும். இரண்டு துறைகளின் ஐகானிக்கள் இணையும் இந்த படம், ஒரு கலாச்சார சங்கமமாகவும், நகைச்சுவையின் பண்டிகையாகவும் அமையும்.

மேலும் குர்ரம் பாப்பி ரெட்டி திரைப்படத்தின் விவரங்கள் விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *