ரேட்டிங் : 3.3 / 5 🔥
“மாஸ், ஸ்டைல், பில்ட்அப் – தலைவருக்காக திரையரங்கு போகுறவர்களுக்கு ஒரு ட்ரீட்…

நடிப்பு: ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சோபின் ஷாஹிர், காளி வெங்கட், கண்ணன் ரவி, சார்லி, ரேபா மோனிகா ஜான்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்
இசை: அனிருத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையின் பல ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்த இந்த நட்புக்கு ஒரு நாள் திடீர் அதிர்ச்சி. சத்யராஜ் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். முதல் நிலையில் இது ஒரு இயல்பான மரணம் என அனைவரும் கருதினாலும், ரஜினி தனது நுண்ணறிவால் இது ஒரு சாதாரண மரணம் அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
உண்மையை அறிய அவர் நேரடியாக களத்தில் இறங்குகிறார். விசாரணை அவரை கடத்தல் கும்பலின் இருண்ட உலகுக்குள் இழுக்கிறது. அந்தக் கும்பல் சட்டவிரோத வர்த்தகம், மனிதக் கடத்தல், ஆயுதம் பரிமாற்றம் போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ரஜினி உணர்கிறார். இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் சக்திவாய்ந்த நபர்கள் மற்றும் அவர்களின் அரசியல் தொடர்புகளும் வெளிச்சம் பார்க்கின்றன.
இதே நேரத்தில், அந்தக் கும்பலின் அடுத்த குறி நண்பரின் மகள் என்பதையும் அவர் அறிகிறார். தன் நண்பனின் மரணம் மட்டுமின்றி, மகளின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், ரஜினி ஆபத்தான பயணத்தை தொடங்குகிறார்.
இந்த பயணத்தில், நாகார்ஜுனா, சோபின் ஷாஹிர் போன்ற வில்லன்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக ரஜினிக்கு எதிராக நிற்கின்றனர். ஒவ்வொரு வில்லனும் தனித்தனி பின்னணி, பழிவாங்கும் உணர்வு, அதிகார வேட்கை போன்றவற்றால் கதையை மேலும் சிக்கலாக்குகின்றனர்.
இதற்கிடையில், ரஜினியின் கடந்த காலம், அவர் யார், ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார், அவரின் பழைய தொடர்புகள், தவறான முடிவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. இதனால் கதைக்கு பல அடுக்குகள் சேர்ந்து, திரையில் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கலந்த அனுபவத்தை உருவாக்குகிறது.
எல்லா தடைகளையும் தாண்டி, தன் நண்பனுக்கான நீதி மற்றும் மகளின் உயிரைக் காப்பாற்ற, ரஜினி எடுத்த முடிவு, அவர் செய்த திட்டங்கள், அதற்கான தியாகங்கள் — இவை அனைத்தையும் கூறுவதே ‘கூலி’.
தலைவர் திரைக்கு வந்தா, அந்த ஸ்டைல், அந்த சுறுசுறுப்பு — எப்போவும் போல வேற லெவல்!
இந்த படத்துல, கிராபிக்ஸ் டெக்னாலஜி கொண்டு இளமைக்கால ரஜினியை அப்படியே உயிரோடு கொண்டு வந்திருக்காங்க.
அவர் வசனம் பேசுற பாணி, உடல் மொழி, கண் பார்வை — அப்போ பார்த்த அந்த ரஜினியை நேரடியாக ஹால்ல வச்ச மாதிரி இருக்கும்.
சண்டைல அடிச்சாலும், டான்ஸ்ல ஆடியாலும், எல்லாத்துலயும் அவர் இன்னும் இளமைத்தோட கலக்குற மாதிரி கிராபிக்ஸ் நிச்சயமா ஹெல்ப் பண்ணிருக்கு. ஆனா அது ஒவரா தெரியாம, இயல்பா கலந்து இருக்குறது தான் ரசிக்க வைக்குது.
மொத்தத்தில், திரைக்கு அவர் வந்தா, ரசிகர்கள் கண்ணு தட்டாம பார்த்துக்கிட்டே இருப்பாங்க.
“ஸ்டைலுக்கு சொந்தக்காரர்… அந்த பேருக்கு உரிய தரம்!” 🔥🎬
நாகர்ஜுனா … 💥 “வில்லன் ஆனா… மனசுல ஹீரோ!” 💥
நாகார்ஜுனா இந்த படத்துல எவ்ளோ பெரிய வில்லனா வந்தாலும், தலைவருக்கான மரியாதை ஒருபோதும் குறையல.
தலைவர் “சார்”னு கூப்பிட்டா, “பெயர் சொல்லி கூப்பிடுங்க”னு பணிவா சொல்றார்.
தரையில உட்கார்ந்திருந்தாலும், தலைவருக்காக நாற்காலி எடுத்து வைப்பார்…
அந்த ஒரு சீனே, அவர் வில்லனா இல்ல, “மனுஷனா” கலக்குறார்னு புரிய வைக்கும்! 🔥
மலையாள நடிகர் சவுபின் சாஹிர்….. 🔥 “சீன்ல வந்தா… எல்லாரையும் ஓவர்டேக் பண்ணுவாரு!” 🔥
நாகார்ஜூனாவை மட்டும் இல்ல, சில சீன்ஸ்ல தலைவரையே ஓரம கட்டுற அளவுக்கு கலக்குறாரு சவுபின் ஷாஹிர்.
படம் முழுக்க தொடர்ந்து வரும் அவர், ஒவ்வொரு காட்சியிலும் நடிப்புல முந்திக்கிட்டு, ரசிகன் மனசுல நேரா இடம் பிடிக்குறாரு.
சிம்பிளா சொன்னா — “வந்த சீன்ல பில்ட்-அப் வேணாம்னாலும், மக்கள் கொடுக்கிறாங்க!” 🎯🔥
ரஜினிகாந்தின் நண்பராக சத்யராஜ் தன் இயல்பான நடிப்பால் கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறார்.
அவரது மகள்களாக ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஷி ஆகியோர் திரையில் அழகும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.
கண்ணன் ரவி, காளி வெங்கட், சார்லி, அய்யப்பன் பி. சர்மா உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை குறையில்லாமல், படத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள்.
💥 “சில நிமிஷம் தான்… ஆனா பாஸ் கலக்குறாரு!” 💥
ஸ்பெஷல் அபியரன்ஸ்ல வந்த ஆமிர் கான், ஸ்கிரீன்ல வந்தவுடனே அட்டகாசம்!
அந்த லுக், அந்த கம்பீரம் — விக்ரம் படத்துல சூர்யா எண்ட்ரி கொடுத்த அதே பிலிங்கை நினைவுக்கு கொண்டு வர்றது.
“சீன் சின்னதா இருந்தாலும், இம்பாக்ட் பெரியது!” 🔥🎯
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், கதைக்கு தேவையானதை மட்டுமல்ல, அதற்கு மேலான அழகையும் சேர்த்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியும் திரையில் பிரமாண்டமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் தெரிகிறது.
அவர் கேமரா வேலை, படத்தின் உணர்ச்சியும் அதிரடியும் இரண்டையும் சமமாக உயர்த்தி நிறுத்துகிறது.
ஜெயிலர் பட பாணியில், தனது முந்தைய படங்களின் சிறந்த அம்சங்களை இணைத்து, கதை மற்றும் திரைக்கதையை நுட்பமாக அமைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கதைக்குள் ஒரு கதை என்ற கோணத்தில், ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக பல அடுக்குகளும் சஸ்பென்ஸ்களும் நிறைந்த ஒரு அனுபவத்தை வழங்குகிறார்.
படத்தின் முதல் 20 நிமிடங்கள் துவங்கியவுடனே சுவாரஸ்யம் உச்சத்திற்கு சென்று, விறுவிறுப்பாக நகர்கிறது.
கடத்தல் கூட்டத்திற்குள் ரஜினிகாந்த் நுழையும் தருணம் முதல், கதையோ பல திசைகளில் கிளைப்பட்டு, ஒவ்வொரு வில்லனின் எண்ட்ரியும் தனித்துவமான ஆச்சர்யத்தை தருகிறது.
இது பார்வையாளர்களுக்கு “அடுத்த சீன்ல என்ன வரும்?” என்ற ஆர்வத்தை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிறது.
வில்லன்களின் திருப்பங்களை வைத்து காட்சிகளை வேகமாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அதோடு, ரஜினிகாந்தின் மனைவி, தொலைந்த மகள் போன்ற உணர்ச்சி நிறைந்த அம்சங்களையும் இணைத்து, கதைக்கு மேலும் மனதைக் கவரும் பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில், தனது சினிமா உலகத்தை உருவாக்கி, அதில் ரஜினிகாந்தை வித்தியாசமான பயணத்தில் அழைத்து சென்று, ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான அனுபவத்தை வழங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
🔥 ரேட்டிங் : 3.3 / 5 🔥
“மாஸ், ஸ்டைல், பில்ட்அப் – தலைவருக்காக திரையரங்கு போகுறவர்களுக்கு ஒரு ட்ரீட்…