சமுத்திரக்கனி , பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது.

சமுத்திரக்கனி , பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது.

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” .

புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது . சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது. அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.என்கிறார் படத்தின் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *