அதிநவீன தொழில்நுட்பத்துடன்மீண்டும் திரைக்கு வருகிறது”உயிருள்ளவரை உஷா”!

அதிநவீன தொழில்நுட்பத்துடன்
மீண்டும் திரைக்கு வருகிறது
“உயிருள்ளவரை உஷா”!

டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”!

டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!

மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’, சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த ‘எங்க வீட்டு வேலன்’ போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!

இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *