
🎬 காந்தி கண்ணாடி – திரைப்பட விமர்சனம் 🎬
நடிப்புப் பட்டியல் (Casting):
கே.பி.வை. பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், ஆராத்யா ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன்
இயக்கம் (Directed By): ஷெரீஃப்
இசை (Music By): விவேக் – மெர்வின்
தயாரிப்பு நிறுவனம் (Produced By): அதிமூலம் கிரியேஷன்ஸ் – ஜெய் கீரண்
💍 காந்தி கண்ணாடி – கதை சுருக்கம்
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்திவேல், காதலியை கரம் பிடிக்க, சொத்து–சொந்தம் எல்லாத்தையும் விட்டு சென்னைக்கு வர்றார். அவரோட மனைவி அர்ச்சனாவுடன், வாரிசு இல்லாதபோதும், காதலின் சுத்தமான வடிவத்தில், ஆரம்பத்தில் இருந்த மாதிரி 60 வயசு வரைக்கும் மகிழ்ச்சியா வாழ்ந்து வர்றாங்க.
அந்த சமயத்துல, மனைவியின் 60வது கல்யாண ஆசை நிறைவேற்றணும் என்பதற்காக, அவர் நிகழ்ச்சி நிறுவனமோட பாலாவை (KPY பாலா) அணுகுறார். ஆனால் பாலா காதலின் அருமையை விட, லாபத்தையே முன்னிலைப்படுத்தி பார்ப்பவர்.
அர்ச்சனாவின் ஆசை பிரமாண்டமா நிறைவேறணும் என்பதற்காக, பாலா கேட்கும் பெரிய தொகையை பாலாஜி சக்திவேல் ஏற்பாடு செய்கிறார். எல்லாருக்கும் சந்தோஷம் வந்துடுற மாதிரி இருக்கும் நேரத்திலேயே, அரசு அறிவிப்பு வந்துடுது – அவர்களிடம் இருக்கும் பணம் திடீர்னு மதிப்பில்லாததாக மாறிடுது.
இனி, பாலாஜி சக்திவேல் எப்படி அந்தப் பணத்தை மாற்றி, மனைவியின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்?
பணம்–லாபம் தான் வாழ்க்கைன்னு நினைக்கும் பாலா, காதல் முன்னிலைக்கு வந்தப்போ எப்படி மாறுகிறார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் – ‘காந்தி கண்ணாடி’, நகைச்சுவையோடும், உணர்ச்சியோடும் சொல்லப்பட்டு இருக்கிறது.
🎭 பாலா – ஹீரோவாக
நாயகனாக நடித்திருக்கும் பாலாவுக்கு இது தான் முதல் படம் என்பதுதான் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவா தெரிகிறது.
தொலைக்காட்சி பாலாவுக்கும், வெள்ளித்திரை பாலாவுக்கும் look-ல கொஞ்சம் மாற்றம் இருந்தாலும், நடிப்பில் இன்னும் வளர்ச்சி தேவை என்பது உண்மை.
💃 நடனம் – நன்றாக ஆடுறார்.
😂 டைமிங் காமெடி வசனங்கள் – சிரிக்க வைக்க முயற்சி பண்ணுறார்.
😭 செண்டிமெண்ட் சீன்கள் – பார்வையாளர்கள் மனசை வருடணும் என்கிற முயற்சி இருக்கு.
ஆனா, எல்லாம் முயற்சியாகத்தான் தோன்றுது, அவ்வளவு impact-ஆ இல்ல.
ஆனாலும், இது அவரோட முதல் படம்தான். அடுத்தடுத்த படங்களில் நிச்சயமாக பாலா acting-ல level up பண்ணி பாராட்டு வாங்குவார்ன்னு நம்புறோம்.
🎭 பாலாஜி சக்திவேல் – உண்மையான நாயகன்
படத்தின் உண்மையான நாயகனாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், எதார்த்தமான நடிப்போடும், உணர்வுப்பூர்வமான வெளிப்பாடோடும் பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார்.
தன் காதல் மனைவியை நேசிக்கும் விதத்தை அவர் வெளிப்படுத்திய விதம் – மனதை வருடும் அளவுக்கு அழகாக இருக்கிறது. ஒவ்வொரு frame-லுமே அவர் presence படம் itself-க்கு backbone ஆக நிற்கிறது.
👩🦰 நமீதா கிருஷ்ணமூர்த்தி – நாயகியாக வந்திருக்கும் இவர், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து, கதாபாத்திரத்தோடு கலந்துவிட்டார் போலத் தெரிகிறார்.
🌟 அர்ச்சனா – பாலாஜி சக்திவேலின் மனைவியாக நடித்திருக்கும் இவர், தன் அனுபவமான நடிப்பு மூலம் கதைக்கும், படத்திற்கும் ஒரு உறுதியான அடையாளம் கொடுத்து, படத்துக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார்.
🎭 சிறப்பு வேடங்கள்
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன்,
அதோடு நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு போன்றோர் –
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அழகாக செய்து, திரைக்கதை ஓட்டத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்.
🎥 ஒளிப்பதிவு – பாலாஜி கே.ராஜா
லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்ட காட்சிகளை பிரமாண்டமாக சித்தரித்திருக்கிறார்.
குறிப்பாக இரவு காட்சிகள் மற்றும் கோவில் திருவிழா sequences பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில், பளபளப்பாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களையும் அழகாக frame-ல ஒளிர வைத்திருக்கிறார்.
🎶 இசை – விவேக் – மெர்வின்
பாடல்கள் – கொண்டாடும் மாதிரி, repeat mode-க்கு செல்லும் வகையில் இருக்கிறது.
பின்னணி இசை – காட்சிகளுக்கு உயிர் ஊட்டி, emotional connect-ஐ இன்னும் உயர்த்தி இருக்கிறது.
✍️ கதை, திரைக்கதை சிம்பிள் தான். ஆனா அதை சுவாரஸ்யமா, எதிர்பார்ப்பு கூட்டும் விதமா ஓடச் செய்ய, படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் நல்லா முயற்சி பண்ணிருக்கார்.
இளமையிலும் முதுமையிலும் அன்பை வெளிப்படுத்துதுதான் உண்மையான காதல் என்று ஷெரிப் சொல்ல முயற்சி செய்கிறார். இன்று காதல்-திருமணங்கள் எளிதில் முடிவடையும் சூழலில் இது ஒரு நல்ல message.
கதை சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும், இயக்குநர் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற வகையில் நாகரீகமாக கதை சொல்ல முயற்சித்துள்ளார். ஆனாலும் அது “பவர் ஹிட்” ஆக மாறவில்லை.
மொத்தம்: படத்திற்கு பவர் இல்லை, ஆனால் எண்ணங்கள் நல்லவை.
ரேட்டிங்: 2.9/5 ⭐