சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த வீடியோ வெளியீடு

சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த வீடியோ வெளியீடு

சிலம்பரசன் டி. ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த கூட்டணி குறித்த புது அப்டேட்ஸ் விரைவில் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அந்த காணொலியில் STR ன் தோற்றம் அல்லது கதைக்கள விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும்.. ரசிகர்களிடையே உற்சாக அலையை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தலைப்பு, வடிவமைப்பு மற்றும் எழுத்துரு ஆகியவை.. தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற கேங்ஸ்டர் படமான ‘வடசென்னை ‘( 2018) படத்தின் பாணியுடன் வலுவாக ஒத்திருக்கிறது.

இந்த ஒற்றுமை வரவிருக்கும் STR.ன் படம்.. வடசென்னையின் பிரபஞ்சத்துடன் இணைக்கப்படலாம் என்ற உடனடியான ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய படம் வடசென்னைக்கு இணையான காலவரிசையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இயக்குநர் வெற்றிமாறனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘தக்‌ லைஃப் ‘ படத்தில் நடித்த சிலம்பரசன் டி ஆர் – அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தை எட்டவில்லை என்றாலும்… அவருடைய தனித்துவமான நடிப்பிற்காக அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார். சிக்கலான மற்றும் பன்னடுக்கு பாணியிலான கதைச்சொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் வெற்றிமாறனுடன், STR இணைந்து பணியாற்றும் படம், தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அப்டேட்டிற்காக ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அந்த அப்டேட்டில் படத்தின் தலைப்பு & சிலம்பரசனின் தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *