
தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!
‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது.
‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, “‘தணல்’ படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, “‘தணல்’ படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகி இருந்தாலும் இப்போது அதுவே அதிர்ஷ்டமாகி உள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் அரங்கம் நிறந்த காட்சி மனநிறைவாக உள்ளது” என்றார்.
‘தணல்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.