தண்டகாரண்யம்’ திரைப்பட விமர்சனம்

’தண்டகாரண்யம்’ திரைப்பட விமர்சனம்

🎬 நடிப்பில்: தினேஷ், கலையரசன், டான்சிங் ரோஸ் ஷபீர், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள் தாஸ், முத்துக்குமார், யுவன், மயில்சாமி

🎥 இயக்கம்: அதியன் ஆதிரை

🎶 இசை: ஜஸ்டின் பிரபாகரன்

🏢 தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ் & லெர்ன் அண்ட் டீச் – பா.ரஞ்சித், சாய் தேவானந்த். எஸ், சாய் வெங்கடேஸ்வரன்

இராமாயணத்தில் வரும் “தண்டகாரண்யம்” என்பது தண்டனைக்குரியவர்கள் வாழும் காடு. அந்தப் பெயரையே வைத்து, உண்மையில் யாருக்குத்தான் தண்டனை கிடைக்கிறது என்பதைக் கேள்விக்குறியாக நிறுத்துகிறது இந்த படம்.

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதி கிராமத்தில் நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா–அம்மா எல்லாரும் சேர்ந்து வாழ்கிறார்கள். கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் ஆசை என்னவென்றால் எப்படியாவது அரசுப் பணி பிடிக்கணும். ஆனா, ஒரு உயர் அதிகாரியுடன் தினேஷ் சண்டை போட்டதால், கலையரசனின் வேலையும் பறிகிறது.

தம்பியின் எதிர்காலத்துக்காக தினேஷ், தன் நிலத்தையே விற்று, ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளை அடக்க மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு படையில் கலையரசனை சேர்க்கிறார். அங்கிருந்து கதையே வேறொரு திருப்பம் எடுக்கிறது. அங்கே நடந்த சம்பவங்களும், அதின் விளைவுகளும் நம்ம மனசையே கலங்க வைக்கிறது.

தினேஷ், கலையரசன் – இந்த இருவரும் படத்துக்கு literally backbone. பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவங்களின் போராட்டம், வேதனை—அனைத்தையும் உண்மையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறாங்க.

“பழங்குடியின இளைஞனின் உயிரோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார் தினேஷ். அதிரடிக் காட்சிகளில் அவர் காட்டும் intensity அசர வைக்கிறது. குறிப்பாக, மிகப்பெரிய அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் வசனங்கள்—அவரது உரத்த உச்சரிப்பால் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கின்றன.”

“தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் எளிய மனிதனாக கலையரசன் நம்ப வைக்கிறார். உயிர் போகப்போகுது என்று தெரிந்த அச்சத்திலும், அங்கிருந்து தப்பிக்க போராடும் தருணங்களிலும் அவர் காட்டிய நடிப்பு – படம் பார்ப்பவர்களையே பதட்டப்படுத்தும் அளவுக்கு இருக்கிறது.”

“சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி – எல்லோருமே கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு. அவர்களின் உடல் மொழியும், இயல்பான நடிப்பும் அந்த கதாபாத்திரங்களை நம்ம மனசில் நிச்சயமாக imprint பண்ணி விடுகிறது.”

“ஜஸ்டின் பிரபாகரனின் இசை ‘தண்டகாரண்யம்’ படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது!
டைடில் கார்டு போடும் தருணமே பீஜியத்தில் கவனம் ஈர்க்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘காவக்காடே…’ பாடல் கதைக்களத்தின் உணர்வுகளை நேரடியாக பார்வையாளர்களுக்குள் கொண்டு சென்று, சம்பவங்களின் தாக்கத்தை இரண்டு மடங்கு செய்கிறது.

“இளையராஜாவின் ‘ஓ…ப்ரியா…ப்ரியா…’ மற்றும் ‘மனிதா…மனித…’ பாடல்களை சரியான நேரத்தில் வைத்து, ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையால் உணர்வை நேரடியாக கவர்ந்திருக்கிறார்.ரசிகர்களின் மனதில் பதற்றமாக எழுப்பி, படத்தின் தாக்கத்தை அதிகரித்திருக்கிறார். . நிச்சயம், இதுதான் இவருக்கு விருதுகள் காத்திருக்கும் தருணம்!”

“ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, அடர்ந்த வனப்பகுதிகளையும், அந்த வனத்தில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அழகோடு மட்டும் காட்டியிருக்காது; அவர்களின் அனுபவிக்கும் வலி, போராட்டம், உணர்வையும் நேர்த்தியாக பார்வையாளர்களின் மனசுக்கு கொண்டு வந்திருக்கிறார்.”

“இரண்டு பாகங்களாக சொல்ல வேண்டிய கதையை கூட, 2 மணி 10 நிமிடங்களில் சொல்லும் அளவுக்கு காட்சிகளை திறமையாக தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே. இயக்குநர் சொல்ல நினைத்த மெசஜும், மக்களுக்கு அனுப்ப வேண்டிய உணர்வுகளும் அவர் கையாள்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.”

“எழுதி இயக்கிய அதியன் ஆதிரை, இதுவரை திரையுலகில் சொல்லப்படாத கதையை அழுத்தமாகவும், உணர்வுகளால் நிரம்பியதாகவும் சொல்லி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.”

“வலியோரால் வஞ்சிக்கப்படும் மக்கள் தட்டிக் கேட்டாலும், திருப்பி அடித்தாலும், அவர்களுக்கு தீவிரவாதி என்ற முத்திரை சுமையாக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் போலியான முகத்தை கிழித்து, உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளார் அதியன் ஆதிரை.

கலையரசனின் பயணம் வலி நிறைந்ததும், எளிய மக்களின் ஏமாற்றம் நிரம்பியதும் இதயத்தை கனக்கச் செய்யும் விதமாக உள்ளது. தினேஷின் பயணம் சில தருணங்களில் கதையை விட்டு விலகியதுபோல் தோன்றினாலும், வஞ்சிக்கப்படும் எளியவர்கள் தான் உண்மையான போராளிகளாக உருவெடுப்பதை அவர் கதாபாத்திரம் மூலம் எளிமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் காட்டி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், நாட்டில் நடந்த பெரிய மோசடியை துணிச்சலோடு சொல்லி, அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்தும் வலிமையான படைப்பாகவும் உருவாக்கியுள்ளார் அதியன் ஆதிரை.

மொத்தத்தில், ‘தண்டகாரண்யம்’ – சொல்லாத கதையை சொல்லும், அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.”

ரேட்டிங் 3.8 /5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *