
இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவரின் இசையில் “மலையப்பன்” திரைப்படத்திற்கான பாடலை பின்னணி பாடகர் பிரசன்னா பாடியுள்ளார். #swamithanrajesh
இசையில்
” ம லை ய ப் ப ன் “
புதிய படம் துவங்கியது!
“லோக்கல் சரக்கு. “
“கடைசி தோட்டா “
ஆகிய படங்களுக்கு
இசையமைத்து பாடல்களை ஹிட் பண்ணியவர் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ். இதனை அடுத்து
” கண்ணோரமே”
என்ற
இசை ஆல்பம் வெளியிட்டார். அதுவும் டிரெண்டிங்கில் உள்ளது.
இவரின் பாடல்கள் வெற்றி பெற்றதை பார்த்த இயக்குனர் குரு சந்திரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ” மலையப்பன் ” படத்திற்கு இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.
மலைமேல் இருக்கும் கடவுளான ” மலையப்பன் ” கதையை சுவாமிநாதன் ராஜேஷிடம் கூறினார். கதையை கேட்ட சுவாமிநாதன் ராஜேஷ் உடனடியாக ஐந்து பாடல்களுக்கு ட்யூன் ரெடி செய்தார். ஐந்தும் வெவ்வேறு ஸ்டைலில் இருப்பதாக கூறிய இயக்குனர், இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை கட்டிப் பிடித்து பாராட்டினார்.
இந்த படத்திற்காக காதல்மதி எழுதிய
” வேஷங்கட்டிக்கிட்டு” என்ற பாடலை பிரசன்னா பாட தனது இசையில் வீரமிக்க பாடலாக பதிவு செய்தார்.
பாடலை கேட்ட பட குழுவினர் இசையமைப்பாளரை
கைகுலுக்கி கைதட்டி பாராட்டினர்.
மலையப்பன் படத்தில்
பிரபல முன்னணி இசையமைப்பாளரை பாட வைக்க சுவாமிநாதன் ராஜேஷ் முயற்சித்து
வருவதாக கூறினார்
கிளாமர் சத்யா
PRO