
தாரிணி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகிறது “உன்னை பார்க்காமலே”….
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கே.துரை வசந்த்!
கதாநாயகனாக அகிலன் நடிக்கிறார். கதாநாயகிகளாக சுகன்யா , சௌந்தர்யா நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக எஸ்.எம்.முருகன் நடிக்கிறார். சிஸ்சர் மனோகர், முத்துக்காளை, சாப்ளின் பாலு, விகடன், குள்ள சங்கர், சுகி, மகிமா, அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள்!
நகரத்தில் வாழும் கதாநாயகி மன அமைதிக்காக கிராமத்திற்கு செல்கிறாள். அங்கு இருக்கும் கதாநாயகன் மீது காதல் வயப்படுகிறார். அதே சமயம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கிறாள்.
மேடை நாடகம் போடும் கதாநாயகனுக்கு கவிதை ஒன்று தேவைப்பட, நாடகத்தின் சூழலை புரிந்து கொள்ளும் நகரத்து கதாநாயகி ஹீரோவுக்காக கவிதையை எழுதி மறைந்திருந்து வீசிகிறாள்.
அந்தக் கவிதை ஹீரோவின் நாடகத்திற்கு பொருந்துவதோடு, அவள் மீது காதலும் விடுகிறது. உடனே கவிதை எழுதிய பெண்னை தேட ஆரம்பிக்கும் ஹீரோ, அவளை கண்டு பிடித்தாரா… கரம் பிடித்தாரா… ஒருதலை காதல் என்னவானது என்பதுதான் கதை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.துரை வசந்த். ஒளிப்பதிவு தங்கப்பாண்டியன், இசை விக்ரம் செல்வா, எடிட்டிங் இத்ரீஸ், சண்டை பயிற்சி ஜீவா ரங்கன், பாடல்கள் மோகன்ராஜ், சீர்காழி சிற்பி, நடனம் ராம், சுந்தர், கலை ராம்ஜி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணை தயாரிப்பு வீ.மாரீஸ்வரன்.
மூணாறு, மறையூர், தென்காசி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘உன்னை பார்க்காமலே’ விரைவில் திரைக்கு வருகிறது ரசிகர்கள் பார்க்க!
@GovindarajPro