ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில், பிரபல நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், டீசல் படத்தின் “பீர் பாடல்” மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா இப்பாடலை பாடி இருக்கிறார்.

இந்த விழிப்புணர்வு பாடல் மூலம், போலியான “ஷேர் மார்க்கெட்” முதலீட்டு தளங்களின் காட்சிகள், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றி பணத்தை பறிக்கின்றன என்பதைக் காட்டி, மக்கள் அதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு சென்னை பெருநகர காவல் துறையினர், நடிகர்கள் அஷோக் செல்வன் மற்றும் ரமேஷ் திலக் நடித்த “Oh My Kadavule” திரைப்படக் காட்சிகளை போலவே ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வெளியிட்டது. அதில் Online Investment Scams குறித்து எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, சுமார் 1 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பாடல் வெளியீட்டின் மூலம், சென்னை பெருநகர காவல் பொதுமக்களிடம் மீண்டும் ஒருமுறை, “ஆன்லைன் வழியாக ‘மிகுந்த லாபம் தரும் முதலீடு’, ‘உடனடி வருமானம்’, அல்லது ‘பங்குச் சந்தை நிபுணர்கள்’ என கூறி வரும் போலி தளங்கள் மற்றும் நபர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.

உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை இழப்பதிலிருந்து பாதுகாக்க, எச்சரிக்கையாக இருங்கள், என அறிவுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் இதனைப் பார்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் பகிர்ந்து, ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சென்னை பெருநகர காவல் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *