
அகரா
எதைத் தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு உருவாகி வரும் படம் அகரா என்கிறார் இயக்குனர்
ஜீவாபாரதி.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் இப்படத்தை
எம்.பி நக்கீரன் தயாரிப்பில்
ஜீவாபாரதி இயக்கி வருகிறார்.
எம்.பி நக்கீரன்,லிபியா ஸ்ரீ ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நடிக்க நிஷாந்த்,
ஜீவாபாரதி, கோவை
டாக்டர்.கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில் தங்கவேல் ரமேஷ் ராதா,ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன் மற்றும் இனியன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு & இசை
யு.எம் ஸ்டீவன் சதீஷ்
படத்தொகுப்பு – அஸ்வின் உமாபதி
நடனம் – மேகலா மாதேஸ்வரன், அருண்
இணை தயாரிப்பு – கோவை
டாக்டர்.கே.கண்ணன்
தயாரிப்பு –
எம்.பி நக்கீரன்
கதை திரைக்கதை
வசனம் பாடல்கள்
இயக்கம் –
ஜீவாபாரதி
இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பாலக்காடு அட்டப்பாடி ஆகிய இடங்களில் இடைவிடாது நடைபெற்று வருகிறது
கதாநாயகன் நாயகியை மீட்ட படக்குழுவினர்
கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகன் நாயகி பேசிக் கொண்டிருப்பதாக காட்சி அமைப்பு. இயக்குனர் காட்சியை விளக்கி கூறி பின் ஆக்ஷன் என்றதும் கதாநாயகி லிபியா ஸ்ரீ
மலைக்ககுன்றின் 100 அடி பள்ளத்தாக்கில் சறுக்கிக் கொண்டே விழுந்து
விட்டார். உடனே பதட்டம் அடைந்த நாயகன் நக்கீரன் தானும் சறுக்கிக்கொண்டே இறங்கி காப்பாற்ற முயன்றார. ஆனால் இருவரும் கீழே மாட்டிக் கொண்டு மேலே வர முடியாமல் தவித்தனர். படக்குழுவினரும் திகைத்தனர். உடனடியாக பக்கத்தில் உள்ள மலை கிராமத்தில் மிகப்பெரிய கயிறு வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கயிறை இறக்கி இருவரையும் ஒருவர் ஒருவராக மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.புல்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இருவருக்கும் சிறிய காயத்துடன் தப்பித்தனர்.
எனினும் நாயகி லிபியாஸ்ரீ அச்சத்தில் மயக்கம் அடைந்தார்.அவருக்கு முதலுதவி சிகிரிச்சை அளிக்கப்பட்டு, ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.