
டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா !!
தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பங்கேற்பில் திரு. சக்தி தலைமையில் இயங்கி வரும் டைர்கடர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் மாபெரும் குறும்பட விருது விழா, நவம்பர் 1 ஆம் தேதி சென்னை வடபழனி பரணி ஸ்டூடியோவில் கோலாகலமாக நடைபெற்றது.
பங்கேற்பாளர்களின் கதை சொல்லும் திறமையை ஐந்து நிமிடத்திற்குள் காட்சிப்படுத்தி அவர்களை வேல்யூ செய்ய திரைப்படங்கள் இயக்கிய வெள்ளித்திரை இயக்குநர்கள் பார்த்து அரங்கிலேயே நேரடி தேர்வு செய்து விருது பெறும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக விழா அமைப்பினர் அமைத்திருந்தினர்.
மற்ற குறும்பட விழாக்களை விட இதன் சிறப்பம்சம் என்னவெனில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய பணம் வாங்குவதற்கு முன்,படங்கள் காட்டப்பட தேர்வு செய்தாலேயொழிய பணம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதேசமயம் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட படங்கள் அனைத்தைமே திரையில் திரையிடப்படும் என வித்தியாசமான முறையில் விதிமுறைகள் அமைத்திருந்தனர்.
இந்த குறும்பட விழாவில்,மொத்தமாக 35 குறும்படங்கள் திரையிடப்பட்டன.13 வயது முதல் 74 வயது வரையிலான படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.
திரையுலக பிரபலங்கள் நான்கு தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன், தேசிய விருது இயக்குநர் பிரம்மா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் SS குமரன்,இயக்குநர் இ. வி.கணேஷ்பாபு, இயக்குநர் மகா கந்தன், இயக்குநர் ஹாரூன், நடிகர்கள் சம்பத் ராம், விஜய் விஷ்வா, மைக்கேல் தங்கதுரை,ஶ்ரீராம் கார்த்திக், அசோக் பாலகிருஷ்ணன், விஜித் மற்றும் தயாரிப்பாளர் கேப்டன் எம். பி ஆனந்த் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்த விழாவில் நடுவர்கள் முன்னிலையில் 35 குறும்படங்களும் திரையிடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும்,சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சிறந்த இசையமைப்பாளர் என டெக்னீஷியன்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களும், சிறந்த மூன்று படங்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் என அனைவருக்கும் ஒரு அங்கீகாரத்தை அளித்து பிரமிக்க வைத்திருந்தனர். இதில்
13 வயது சிறுவனின் குறும்படமும், 74 வயது முதியவரின் குறும்படமும் திரையிடப்பட்டது விழாவின் முக்கிய அம்சமாக அனைவராலும் பாராட்டப்பட,அவர்களை ஊக்கவிக்கும் விதமாக இருவருக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Directors Club Charitable Trust என்பது உதவி இயக்குநர் சக்தி என்பவரால் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, சென்னையில் இயங்கும் ஒரு சமூக மற்றும் திரைப்பட பயிற்சி அமைப்பாகும்.இது முழுக்க முழுக்க வாட்ஸப்பில் இயங்கிக் கொண்டு சினிமா இன்டஸ்டரியில் தொழில் முறை உதவி இயக்குநர்கள் இல்லாமல், அதேசமயம் பெரிதாக தொடர்புகள் இல்லாத,ஆர்வமுள்ள உதவி இயக்குநர்கள் என அனைவரையும் சேர்த்து திரைப்படத் துறையில் இயக்குநராகவோ, நடிகராகவோ, டெக்னீஷியன்களாகவோ அவரவர் வாழ்க்கையை மாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 24 வகையான திரைப்படக் கலைகளில் பயிற்சி வழங்குவதுடன், அந்தந்த தொழில் சார்ந்த நிபுணர்களை குரூப்பிற்கு அழைத்து வந்து அவர்களின் படம் சார்ந்த கேள்விகளை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்து வருகிறது.இதில் அபிராமி,சுந்தர் சி, ஏ. ஆர். முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் சிவன்,தயாரிப்பாளர்கள்
தனஞ்செயன், எஸ். ஆர். பிரபு, கலைப்புலி எஸ். தாணு,நெல்சன், சிவ கார்த்திகேயன், மணிரத்னம், ராஜமெளலி என கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு அனுபவங்கள் மட்டுமல்லாமல் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளனர்.
இந்த அமைப்பின் மூலம் அதன் முந்தைய ஆண்டு விழாக்களில் நிறைய திறமையாளர்களை அவரவர் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அவர்களை மேடையேற்றி பல்வேறு துறைகளில் நுழையும் அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி ஒன்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கும் அமைப்பின் . இந்த “Value5 short film festival” என்கிற குறும்பட விழா பல புதிய படைப்பாளர்களுக்கு தளமளித்து பல நல்ல திறமையாளர்களை பொதுத்தளத்திற்கும் அடையாளம் காண வைக்கும் முயற்சி இது.