கிரைம் திரில்லர்-னா இப்படி இருக்கணும்… ஆஹாவில் வெளியான “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்”

கிரைம் திரில்லர்-னா இப்படி இருக்கணும்… ஆஹாவில் வெளியான “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்”

கிரைம் திரில்லரில் பட்டையை கிளப்பும் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்”

எதிர்பார்ப்பை எகிற செய்யும் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்”

இந்திய அளவில் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக “ஆஹா” விளங்குகிறது. சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மட்டுமின்றி ஏராளமான இணைய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆஹா புகழ் பெற்று விளங்குகிறது. அந்த வகையில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய இணைய தொடர் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை இரவு ஒரு எபிசோடு வீதம் வெளியாகும் இந்த இணைய தொடரின். மூன்று எபிசோடுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஜெஸ்வினி எழுதி, இயக்கி இருக்கும் இந்த இணைய தொடரை பேரபிள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தேவன் சார்லஸ், பிரவீன் குமார் மற்றும் சரண்யா வீரமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். அஷ்வின் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த தொடர் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தும் கதை கொண்டிருக்கும் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” தொடர் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த தொடரின் ஒளிப்பதிவு பணிகளை என்.எஸ். சதீஷ் குமார் மேற்கொள்ள, சாம் ஆர்டிஎக்ஸ் படத்தொகுப்பு பணிகளையும், அஷ்வத் இசையமைத்துள்ளார். கதையின் படி தூள் பேட்டை பகுதியில் துணை ஆணையராக பொறுப்பேற்கும் அஷ்வின் குமார் அங்கு நடக்கும் மூன்று கொலைகள் பற்றிய விசாரணையை தொடங்குகிறார். முதல் இரு எபிசோடுகளில் கிரைம் திரில்லர் அம்சங்களுக்கு துளியும் குறைவின்றி ஏராளமான கேள்விகளை எழுப்பும் திரைக்கதை ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

“தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” தொடரில் அஷ்வின் குமாருடன் குரு லட்சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா, சௌந்தர்யா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வா மித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலமைான் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் சீக்கிரம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *