
தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு!
நடிகர் விஜய்க்கு, நடிகர் தக்ஷன் விஜய் ஆதரவு!
ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும் “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்” என்ற நிலையை மாற்றி படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவோம் என்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியில் உள்ள அனைவரையும், தமிழக மக்களையும் மகிழ்ச்சியடைய செய்கிறது. இதுபோன்ற ஒரு நல்லாட்சியையும், மாற்றத்தையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டது தான் நமது ‘மகாத்மா காந்தி மக்கள் கட்சி’. ஆகவே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைத்து தமிழக மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் மதுவிலக்கு ஆகிய கனவை நனவாக்க உள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். கட்சி தலைமை விருப்பப்பட்டால் தேர்தலில் இணைந்து களப்பணி ஆற்றவும் தயாராக உள்ளோம்.
நன்றி!
இவண்,
Dr. தக்ஷன் விஜய்
மாநில தலைவர், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி.