தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.

திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும்.

A – Attraction (ஈர்ப்பு): முதல் பார்வையிலேயே காதல்- உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு.
E – Emotion (உணர்ச்சி): ஆழமான பிணைப்பு- தியாகம், ஏக்கம், பிரிவு.
I – Intimacy (நெருக்கம்): உடல் மற்றும் மன நெருக்கம்- ஆசை, பற்றுதல், பலவீனம்.
O – Obsession (பிடிவாதம்): இருண்ட காதல்- குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர்.
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்): கட்டுபாடுகளற்ற தூய காதல்- கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு.

ஒரு வரைபடம் போல இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

நடிகர்கள்: யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: ராஜு ஷெரேகர்,
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,
இசை: சரவண சுப்பிரமணியம்,
படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே,
கலை இயக்கம்: எம். கே. மதி.

ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *