ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு

ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து புதிய (சிந்தனைக்)குரல்களை கண்டறியும் நோக்கத்தின் விளைவாக அமைந்ததாக கூறப்படுகிறது.

செம்மலர் அன்னம் இயக்கியுள்ள மயிலா, பணியாற்றும் பெண்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்கள் மீது கொண்டுள்ள பார்வைகளையும் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இயக்குநர் பா. ரஞ்சித் கூறியதாவது:

“‘மயிலா’ பணியாற்றும் பெண்களின் வாழ்வியல் யதார்த்தங்களையும் உள்ளார்ந்த உலகத்தையும் பதிவு செய்கிறது. நேர்மையான சினிமா மொழியுடன், செம்மலர் அன்னம் பெண் உலகத்தை இயல்பான நுணுக்கத்துடன் சித்தரித்திருக்கிறார். மெலடி மற்றும் சுடர் வலுவான நடிப்பை வழங்கியுள்ளனர். ‘மயிலா’ ஒரு கவிதையைப் போல என்னை ஆழமாக நெகிழ வைத்தது.”

அன்றாட அனுபவங்களை பிரதிபலிப்பதோடு, வெளியே சொல்லப்பாடாத முக்கியமத்துவம் பெற்ற விஷயங்களை வெளிச்சமிட்டு காட்டுவதில் கதைசொல்லல் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மயிலா வெளிப்படுத்துகிறது. தனித்துவமான குரல்களும் சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட சினிமாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தக் கதையாக்கம், உள்ளூர் எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கும், படைப்பாளிகளை ஆதரிக்கும் நியூட்டன் சினிமாவின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.

“செம்மலர் அன்னத்தின் கதைசொல்லலின் மூலம் பணி புரியும் பெண்களின் அனுபவங்களையும் அவர்களின் மன உறுதியையும் பதிவு செய்யும் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படமே ‘மயிலா’. தனித்துவமான குரல்களையும் சமூக ரீதியாக பொருத்தமான சினிமாவையும் ஆதரிப்பது நியூட்டன் சினிமாவின் மையக் கண்ணோட்டமாகும். IFFR-ல் திரைப்படம் தேர்வாகியிருப்பது ஊக்கமளிக்கிறது,” என நியூட்டன் சினிமாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டோ சிட்டிலப்பிள்ளி தெரிவித்தார்.

மயிலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மெலடி, சுடர் நடிக்க, ஒளிப்பதிவில் வினோத் ஜனகிராமன், எடிட்டிங்கில் ஏ. ஸ்ரீகர் பிரசாத், ஒலி வடிவமைப்பில் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து இத்திரைப்படத்திற்கு தனது உழைப்பை முழுமையாக அளித்துள்ளனர்.

மயிலா பல்வேறு கலாச்சாரங்களிலும் சமூகங்களிலும் பொருந்தக்கூடிய கருப்பொருள்களை எடுத்துரைக்கிறது; பெரும்பாலும் கவனிக்கப்படாத வாழ்க்கைகளுக்கு வெளிச்சம் அளிக்கிறது. இயக்குநரின் காட்சிப்பார்வையையும் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டுப் பண்பையும் பிரதிபலிக்கும் இப்படம், கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகள் சர்வதேச பார்வையாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.

மயிலா மூலம், சமூகப் பொருத்தம் கொண்ட திரைப்படங்களை ஆதரிப்பதிலும், தங்களது படைப்புகளுக்கு உலகளாவிய வெளியீட்டை நாடும் திரைப்படக் கலைஞர்களை வளர்த்தெடுப்பதிலும் நியூட்டன் சினிமா தொடர்ந்து உறுதியாக செயல்படுகிறது.

நியூட்டன் சினிமா அர்த்தமுள்ள கதையாக்கத்தை ஆதரிக்கும் ஒரு சர்வதேச தயாரிப்பு நிறுவனம்.
புதிய தலைமுறைத் திரைப்படக் கலைஞர்களை மையமாகக் கொண்டு, உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாக கொண்டு உலகளாவிய தொடர்பை ஏற்படுத்தும் திரைப்படங்களை இது தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *