
‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் மோகன் குமார். இவர் அற்புதமான நடிகர். நல்ல நடன கலைஞர். என்னுடைய மைதிலி என்னை காதலி படத்திலும், எங்க வீட்டு வேலன் படத்திலும் நடித்தவர். என்னுடைய இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர். மைதிலி என்னை காதலி படத்தில் நடன திறமையாலும், நடிப்பாலும் கலக்கியவர், இன்றைக்கு என் இதயத்தை கலங்க வைத்துவிட்டு, அவர் விடைபெற்று சென்றுவிட்டார் என்ற செய்தி, என்னுடைய இதயத்தில் ஈட்டி போல் தாக்கியது. நெஞ்சமெல்லாம் சோகம். நீங்காத பாரம். அவரை இழந்து வாடக்கூடிய ரசிக பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு,
திரைப்பட இயக்குநர், நடிகர்,
தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர்,
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்
@GovindarajPro