
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ” கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்” என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘வெய்யோன் சில்லி’ பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ மற்றும் ‘கருப்பு’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன” என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ” கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை ஷிவதா பேசுகையில், ” மதுரையில் ‘கருப்பு ‘படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட… அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார் படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்” என்றார்.
நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், ” மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்” என்றார்.
கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், ” ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.
நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது ‘கருப்பு ‘திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி- அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் -அந்த உழைப்பை ‘கருப்பு’ படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
சூர்யா சாருக்கு ‘கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.
இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் ‘சூர்யாவின் ஆண்டு ‘என்று கொண்டாடுவோம் ”என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” சூர்யா சாருக்கு ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு ‘செம விருந்தாக ‘ அமையப்போகிறது” என்றார்.