கர படம் எப்படி இருக்கு.?

கர படம் எப்படி இருக்கு.?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய கதைகளால் ரசிகர்களை கவரும் முன்னணி நடிகர் Dhanush மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியுடன் திரும்பியுள்ளார். அவரது புதிய படம் ‘கர’

1990களின் ராமநாதபுரம் பின்னணியில், விவசாயிகளின் வாழ்க்கையை நெருக்கமாகப் பிடித்து காட்டும் படம் தான் “கர”. தனியார் வங்கியின் கடன் வலையில் சிக்கிக் கொண்ட சாதாரண மக்களின் துயரம், அவர்கள் தப்பிக்க முடியாத நிலையைக் கண்முன்னே நிறுத்தும் வலிமையான கதை.

🎬 கதை சுருக்கம்

தன் பெற்றோருடன் அமைதியாக வாழும் தனுஷ், தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால் வாழ்க்கை எதிர்பாராத திருப்பம் கொடுக்கிறது. தோல்விகளால் துவண்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பும் போது, அங்கே இன்னும் பெரிய பிரச்சனை—கடன் சுமையில் தவிக்கும் கிராமம்.
அந்த நிலைமையில் தன் தந்தையுடன் சேர்ந்து, அந்த சமூகத்திற்கு அவர் என்ன செய்கிறார் என்பது தான் கதையின் மையம்.

நடிப்பு
தனுஷ் – இந்த படத்தில் literally “அசுரன் லெவல்”! பேசாமலே கண்களால் உணர்ச்சி காட்டும் காட்சிகள் goosebumps தரும். குறிப்பாக climax-ல் அவர் கொடுக்கும் emotional performance 💔🔥
K. S. Ravikumar – அப்பாவாக நடித்தது இல்லை… அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். இயல்பான நடிப்பு மனசை உருக்கும்.
Suraj Venjaramoodu (போலீஸ் அதிகாரி) – Screen presence-லேயே tension!
Jayaram – வங்கி அதிகாரியாக பயமுறுத்தும் performance.
M. S. Bhaskar – புதிய look + good acting 👍
Mamitha Baiju – கதைக்கு தேவையான அளவில் வந்து செல்வார்.

🎶 டெக்னிக்கல்…
🎵 G. V. Prakash Kumar – BGM தான் படத்தின் backbone! ஒவ்வொரு emotional scene-க்கும் impact double.
🎥 Theni Eswar – 90s காலத்தை நிஜமாகவே நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். Village visuals + bank சூழல் = pure authenticity.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள “கர” ஒரு நல்ல முயற்சியாக இருக்கிறது. போர் தொழில் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த Vignesh Raja, இந்த படத்திற்காக நேரம் எடுத்துக்கொண்டாலும், அதற்கான தரத்தை திரையில் காட்டியிருக்கிறார்.

இந்த படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள், வங்கி கடன் சிக்கல்கள், ஜப்தி நடவடிக்கைகள் போன்றவற்றை மையமாக கொண்டு நகர்கிறது. இவை எல்லாம் commercial அம்சங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்டிருந்தாலும், கதையின் நம்பகத்தன்மை குலையாமல் இருக்கிறது. கதை சொல்லும் முறையில் ஒரு இயல்பான flow இருக்கிறது.

அப்பா–மகன் உறவு, கிராம மக்களின் துயரம், வாழ்க்கை போராட்டம்—இந்த மூன்றும் சேர்ந்து மனசை நொறுக்கும் அளவுக்கு emotional depth கொடுக்கிறது. குறிப்பாக தனுஷ் மற்றும் K. S. Ravikumar இடையேயான காட்சிகள் heart touching.

மக்களின் பணம் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, அந்த அமைப்புக்குள் நடக்கும் சில தவறான செயல்களை படம் சுட்டிக்காட்டுகிறது. வங்கிகள் மூலம் மக்கள் எப்படி மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதை எதிர்க்க முயலும் ஒருவருக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதையும் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்.

மொத்தத்தில், “கர” ஒரு கருத்துள்ள மற்றும் சமூக பிரச்சனையை பேசும் நல்ல திரைப்படமாக இருக்கிறது. Commercial அம்சங்களும், meaningful content-மும் சமநிலையாக அமைந்துள்ள ஒரு positive படம்.

Rating 4/ 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *