நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் குழந்தைகளுக்கான ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மூளைடானிக்கையை மாண்புமிகு அமைச்சர் வெங்கட்டரமணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் short

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம். மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்துவரும் நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் குழந்தைகளுக்கான ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மூளைடானிக்கையை மாண்புமிகு அமைச்சர் வெங்கட்டரமணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் .
இந்த அறிமுக விழா குழந்தைகளின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல். கவனம் செலுத்தும் திறன். மற்றும் அறிவாற்றல், ஆயுர்வேத கோட்பாடுகளின் அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்வர்ண பிராசன மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது
.இந்த நிகழ்வில் பேசிய ஆர்யன் ஷாம் தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தாலும். உண்மையான ஆயுர்வேத மருத்துவ சேவையை ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் எளிதில் சென்றடைய செய்வதே எங்கள் நோக்கம் என்றார்.
தற்போது தயாராகி வரும் ஆர்யன் ஷாம் சுபாஷ் என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடித்து உலகம் முழுவதும் வெளியாகும் படமாக தயாரித்து வருகிறார்.
இந்த விழாவில் மருத்துவ நிபுணர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள். மற்றும் பலர் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *