நடிகர் எழுதிய புத்தகத்தை, எழுத்தாளரும் இயக்குநருமான லியாகத் அலிகான் வாசித்து, வாழ்த்தினார்!

நடிகர் எழுதிய புத்தகத்தை, எழுத்தாளரும் இயக்குநருமான லியாகத் அலிகான் வாசித்து, வாழ்த்தினார்!

நடிகர் ரவிக்குமார் ‘நான் ராமசாமி பேசுறேங்க’, ‘மகிழ்வித்து மகிழ்’ என இரண்டு புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியது மட்டுமல்லாமல், புத்தகங்கள் எழுதிய நடிகர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வழங்கினார் லியாகத் அலிகான்!

‘என் நெஞ்சை தொட்டாயே’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும், ‘திகிலோடு விளையாடு’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, “நான் ராமசாமி பேசுறேங்க”, “மகிழ்வித்து மகிழ்” ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் அமீர்ஜான் ஆகிய இரு பெரும் இயக்குனர்கள் இயக்கிய, ‘அமுதா ஓர் ஆச்சரிய குறி’என்ற நெடுந்தொடரில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அதே போல் ‘இலக்கணம் மாறுதோ’ என்ற கவிதாலயா கிரியேஷன்ஸ் தயாரித்த மற்றொரு நெடுந்தொடரில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், பத்துக்கும் அதிகமான தொலைக்காட்சி தொடர்கள், மற்றும் திரைப்படங்களிலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

எஸ்.பி.முத்துராமன் கே.ரங்கராஜன், எஸ்.என். சக்திவேல், வெங்கட் போன்ற இயக்குனர்களின் இயக்கங்களில் நடித்துள்ளார்.

தனது குருநாதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ப்ரியா பாலு மற்றும் இந்த நூலை பிரசுரம் செய்த, ‘கோரல் பப்ளிகேஷன்’ துரைராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் நடிகரும், எழுத்தாளருமான ரவிக்குமார்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *