கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக சென்னையில் நடைபெற்றது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.

இப்படத்தை கட்டப்பாவ காணோம் பட இயக்குனர் மணிசியோன் இயக்குகிறார்..
ஒளிப்பதிவு பிரசன்ன குமார், இசை மனு இரவிச்சந்திரன்

இப்படத்தின் பூஜையில் பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடிக்க படபிடிப்பு துவங்கியது, மேலும் டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர்,பட்டிமன்றம் ராஜா,பிரகதி, காயத்ரி, இயக்குனர் திரு ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோர் கலந்து கொண்டனர்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் வாணவேடிக்கை படத்தின் படப்பிடிப்பு மற்றும் புரொடக்சன் நம்பர் 10 படத்தின் படப்பிடிப்பு இரண்டும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6. மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *