
ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!
‘கணம்’ திரைப்பட இயக்குநரின் புதிய திரைப்படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் நடிக்கும் இப்படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார்.
‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்துடன் இணைந்து தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காலப்பயணம் எனும் புதுமையான கற்பனை கருவுடன், தாய் – மகன் உறவின் உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் இணைத்து உருவான ‘கணம்’ திரைப்படத்தை தொடர்ந்து, ஸ்ரீ கார்த்திக் தனது அடுத்த படைப்பின் மூலம் புதிய கதைக்களத்தையும், வித்தியாசமான கலைஞர்களின் கூட்டணியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இந்தப் படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள படக்குழு, ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் ‘தாரா’ கதாபாத்திரத்திற்கான இறுதி தேர்வில் ஈடுபடுகின்றனர்.
அந்த சூழலில் எதிர்பாராத விதமாக வரும் ஓர் அறிவிப்பு அவர்களை திகைக்க வைக்கிறது. தொடர்ந்து, ருக்மிணி வசந்த் அறிமுகமாகும் காட்சியுடன் வீடியோ நிறைவடைகிறது. இதன் மூலம் படத்தின் உலகம் குறித்த முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது படக்குழு.
பட அறிவிப்பை வெளியிடுவதிலும் புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ள மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த 18 மாதங்களில் எதிர்கொண்ட ஏற்ற தாழ்வுகள், சவால்கள் மற்றும் அனுபவங்களை மையமாக கொண்டு, இன்ஸ்டாகிராமில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும் கற்பனை கலந்த ஆவண தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதுவரை ஒன்பது அத்தியாயங்களை கடந்துள்ள இந்த தொடர் நிஜ அனுபவங்களையும் கற்பனை வடிவிலான காட்சிகளையும் இணைத்து, இறுதியில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. படைப்பாற்றலுக்கும் வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தனித்துவமான முயற்சியாக இது அமைந்துள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் ஆகியோரால் தொடங்கப்பட்ட மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட், தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் பெற்றுவரும் படைப்பாக்க நிறுவனமாகும். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற தமிழ் இணைய தொடரான ‘ஐ ஹேட் யூ – ஐ லவ் யூ’ மற்றும் விருதுகளை வென்ற குறும்படமான ‘சைல்ட்ஹுட் டைரீஸ்’ ஆகியவை இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
தற்போது திரைப்பட தயாரிப்பு துறையிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தும் இந்நிறுவனம், புதிய சிந்தனைகளையும் வித்தியாசமான கதை சொல்லல் அணுகுமுறைகளையும் பெரிய திரைக்கு கொண்டுவருகிறது.
தயாரிப்பாளர் ஜஸ்வந்துடன் தொடர்புடைய சிருனி சினி கார்ப்பரேஷன், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சி லா சோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. அப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘கீதா கோலா’, ‘காந்தா’ ஆகிய படங்களுடன் தொடர்புடைய சாய் கிருஷ்ணா கட்வாலும் இந்தப் படத்தின் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார்.
ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான கலைஞர்களும், புதுமையான சிந்தனைகளை கொண்ட படைப்பு குழுவினரும் இணைந்துள்ள இப்படம், அதன் வித்தியாசமான அணுகுமுறையால் தற்போதே கவனம் ஈர்த்துள்ளது.
English Press Release
Rukmini Vasanth Teams Up With Kanam Director Shree Karthick for His Next Tamil Film
The Sapta Sagaradaache Ello and Kantara: Chapter 1 actor joins Dev Ramnath and
Vinayak Vaithianathan in an untitled feature produced by Madboys Entertainment and
Siruni Cine Corporation, with Saikrishna Gadwal as co-producer.
Rukmini Vasanth, known for her performances in Sapta Sagaradaache Ello and Kantara: Chapter 1, has joined hands with Kanam director Shree Karthick for his next Tamil
feature film. Marking their first collaboration, the untitled project will see Rukmini headline the film alongside Dev Ramnath and Vinayak Vaithianathan.
Following Kanam, which blended a high-concept time-travel premise with the emotional depth of a mother-son relationship, Shree Karthick returns with a new venture that brings together a fresh combination of talent.
The makers unveiled the collaboration through a playful announcement video introducing Rukmini as Thara, her character in the film. The video follows Shree Karthick, Dev Ramnath and Vinayak Vaithianathan as they scramble to finalise Thara, only to be
caught off guard by a notification that changes everything. The build-up culminates in Rukmini’s reveal, offering audiences their first glimpse into the film’s world.
In a refreshingly unconventional approach to a film announcement, Madboys
Entertainment has channelled the ups and downs, trials and tribulations of the past 18 months into a fictionalised, Instagram-exclusive docu-drama series. Spanning nine episodes so far, the series blends real experiences with dramatised storytelling,
culminating in the reveal of Rukmini Vasanth as Thara. This inventive approach reflects
Madboys’ creative spirit and adds another dimension to the coming together of Rukmini
and Shree Karthick.
Founded by Dev Ramnath and Shree Karthick, Madboys Entertainment is a creator-led
content studio that has earned recognition for its original storytelling through the popular
Tamil web series I Hate You – I Love You and the award-winning short film Childhood Diaries. With this project, the studio continues its journey into feature filmmaking, bringing its appetite for fresh ideas and unconventional storytelling to the big screen.
The project brings together Madboys Entertainment, Siruni Cine Corporation and co- producer Saikrishna Gadwal. Associated with producer Jaswanth, Siruni Cine Corporation previously backed Chi La Sow, directed by Rahul Ravindran, which won the
National Film Award for Best Original Screenplay. Saikrishna Gadwal, known for his association with Keedaa Cola and Kaantha, is also part of the production team.
With Rukmini Vasanth’s casting now revealed and the title announcement expected
soon, the untitled film brings together a compelling mix of talent and a creative team
keen to approach filmmaking differently.