
‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
லியோ சிவக்குமார் நடிப்பில் ‘டெலிவரி பாய்’ நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன்வெளியீட்டு விழா இன்று திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் தங்களது அனுபவங்களையும் படத்தைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்..,
அமுதா லியோனி பேசியதாவது,
எனது மகன் லியோ சிவக்குமார் ‘டெலிவரி பாய்’ படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காஸ்ட்யூம் டிசைனர் முத்துநவீன் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் சுந்தர் சார் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எடிட்டர் வசந்த் பேசியதாவது
‘டெலிவரி பாய்’ படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நானி, தயாரிப்பாளர் அமுதா லியோனி மற்றும் கதாநாயகன் லியோ சிவக்குமார் ஆகியோருக்கு தனது நன்றி. இப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் நானிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கதாநாயகன் லியோ சிவக்குமார் மற்றும் தயாரிப்பாளர் அமுதா லியோனி குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றப் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த தனக்கு, அவரை நேரில் சந்தித்து தற்போது அவரது குடும்பத்தில் ஒருவராகப் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி. படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர், ‘டெலிவரி பாய்’ திரைப்படம் நிச்சயம் பெரிய வெற்றிபெறும். அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். நன்றி.
கலை இயக்குநர் ஜெய் முருகன் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த சுந்தர் சாருக்கும், லியோ சிவக்குமார் அண்ணனுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும்.
நடன இயக்குநர் மனோஜ் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். ஒரு நடன இயக்குநராக நான் முதன்முதலில் ஒப்பந்தமான படம் இது. லியோ சிவக்குமாருடன் பத்து வருடப் பழக்கம் உள்ளது. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த அவருக்கும், இயக்குநர் நானிக்கும் நன்றி.
‘செங்காத்து’ பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது. டெத் சீக்வென்ஸ் நடனத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். அந்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
டிரெய்லரைப் போலவே படமும் சுவாரஸ்யமாக இருக்கும். நிச்சயம் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து ஆதரவு அளிக்க வேண்டும். அடுத்ததாக வெற்றி விழாவில் சந்திப்போம்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம். இதுவரை அதிகமாகத் திரில்லர் படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாக அமைந்துள்ளது. குறிப்பாக முழுமையான ஃபைட் காட்சிகளுக்குப் பின்னணி இசையமைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. கிளைமாக்ஸில் லியோ சிவக்குமார் அற்புதமாகச் சண்டையிட்டுள்ளார்.
இயக்குநர் நானி கதையைச் சொன்னபோதே, ‘நான் மகான் அல்ல’ படத்தைப் போன்ற ஓர் உணர்வை அழகாக விவரித்தார். அதேபோன்ற உணர்வுகளுடன் பல்வேறு அம்சங்கள் இணைந்து, ஆக்ஷன், டிராமா மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் சரியான அளவில் கலந்து இப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
ராப் பாடகர் தீ பேசியதாவது,
கடந்த பத்து ஆண்டுகளாக சுயாதீன இசைக் கலைஞராக ராப் பாடல்களைப் பாடி வருகிறேன். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் எனது முதல் திரைப்படப் பாடலாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி மற்றும் இயக்குநர் நானி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
நடிகர் உதயா தீப் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது எதிர்பாராத ஒன்று. எனது நேர்காணல் ஒன்றைப் பார்த்த இயக்குநர் நானி, என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டேன். பின்னர் அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. என்மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் நானிக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த லியோ சிவக்குமாருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக லியோ சிவக்குமார் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு மிகவும் யதார்த்தமாகச் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் அனுபவித்த வலியைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது.
‘டெலிவரி பாய்’ படத்தில் ஆக்ஷன், எமோஷன் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்றால் அது தனிப்பட்ட ஒருவரின் வெற்றியாக இல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவின் வெற்றியாக இருக்கும். அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
நடிகர் துஷ்யந்த் பேசியதாவது,
இயக்குநர் நானி ஏற்கெனவே என்னுடன் ஒரு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஒரு நாள் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் இருப்பதாக அழைத்தார். கதையைக் கேட்டதும் இதுவரை நான் முயற்சி செய்யாத கதாபாத்திரமாகவும், முழுமையான ஆக்ஷன் படமாகவும் இருந்ததால் உடனடியாக நடிக்கச் சம்மதித்தேன். இயக்குநர் நானி மற்றும் அவரது குழுவினருடன் மிகவும் நட்பான சூழலில் இரவு, பகல் பாராமல் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.
என்னுடன் எனது குழந்தையாக நடித்த அஞ்சலி என்ற சிறுமியின் நடிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதிகாலை நேரங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றபோதும், ஆக்ஷன் என்று சொன்னவுடன் மிகவும் சுறுசுறுப்பாக நடிப்பார். அவருக்கு திரைத்துறையில் மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவு மிகவும் அவசியம். குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ஒரு நல்ல படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவரும் ‘டெலிவரி பாய்’ படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகை பிரிகிடா சாகா பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் நானி எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்கு நன்றி. இதில் நான் ஏற்கெனவே நடித்த ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படக்குழுவில் பலரும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால், இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக லியோ சிவக்குமார் எனக்கு ஏழு, எட்டு வருடங்களாகத் தெரியும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தில் அவரது ஆக்ஷன் மற்றும் நடிப்பு மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
‘செங்காத்து’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அழகான பாடலைக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் மனோஜ் அந்தப் பாடலுக்கு அமைத்த நடனமும், ஹூக் ஸ்டெப்பும் சிறப்பாக வந்துள்ளன. ராதிகா மேடம் போன்ற அனுபவமிக்க நடிகையுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. உதயா அண்ணா, துஷ்யந்த் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சண்டைக் காட்சிகளுக்காக உழைத்த ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி மேடையில் குறிப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக நானும் இயக்குநர் நானியும் கடுமையாக உழைத்திருக்கிறோம். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்தில் ஏராளமான தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம். பல நிராகரிப்புகளையும் தோல்விகளையும் எதிர்கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நானும் அவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தோம். இந்தப் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். இயக்குநர் நானியின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடிட்டர் வசந்த், நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி என அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். உதயா மற்றும் துஷ்யந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்தில் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக துஷ்யந்த் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். பிரிகிடா இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு. குறும்படங்களில் இருந்தே அவரைத் தெரியும் அவருடன் நாயகனாக சேர்ந்து நடிப்பேன் என நினைத்ததில்லை. ராதிகா மேடத்துடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். எங்கள் படத்தை நம்பித் தயாரித்த மாதேஸ்வரன் அண்ணன் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நான் குறும்படங்களில் நடித்து, பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தேன். திரைத்துறைக்கு வந்த பிறகுதான் எனது தந்தையின் பெயரான லியோனியின் பெயரும் என்னுடன் இணைந்தது. எனவே, என்னை எனது தந்தையின் அடையாளத்தின் வழியாகப் பார்க்காமல், தனித்துவமான கலைஞனாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்ததில் தவறு இருந்தாலும் விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதேபோல் நல்ல விஷயங்கள் இருந்தால் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
இயக்குநர் நானி பேசியதாவது,
எனது நீண்ட நாள் கனவான இயக்குநர் பயணம் ‘டெலிவரி பாய்’ படத்தின் மூலம் நனவாகியுள்ளது. இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த பெற்றோர், குடும்பத்தினர், அக்கா பரணி மற்றும் மனைவி ராதிகா ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும், அவர் என்மீது வைத்த நம்பிக்கையும் எனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லியோ சிவக்குமாரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். அவர் கதையை விரும்பி ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாகப் பல போராட்டங்களையும் தயாரிப்பாளர் தேடும் சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எங்களை நம்பி ஆதரவளித்த மாதேஸ்வரன் அண்ணன் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரிகிடா, ராதிகா சரத்குமார், உதயா, விஷால் உள்ளிட்ட நடிகர்களையும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஏழு புதிய கலைஞர்களையும் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் பாராட்டியது எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக எனது கதையை முழுமையாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்த லியோ சிவக்குமாருக்கு என் வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
சிறப்பு விருந்தினர் நடிகர் ஜெய் பிரகாஷ் பேசியதாவது,
“லியோ சிவக்குமார் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தனது தந்தையின் அடையாளத்தைத் தாண்டி தனக்கான இடத்தைப் பிடிக்கப் போராடி வருவதை அவர் ஆணித்தரமாகப் பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது முயற்சிக்கு நிச்சயம் நல்ல வெளிச்சம் கிடைக்க வேண்டும்.
பொதுவாகப் படத்தின் பிரிவியூ நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பேன். ஆனால் ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்துவிட்டு முழு நம்பிக்கையுடன் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். டிரெய்லரில் இருந்த விறுவிறுப்பு படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி நொடி வரை தொடர்கிறது. ராதிகா சரத்குமார் தவிர மற்ற பலரும் புதுமுகங்களாக இருந்தாலும், அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் நானி தனது குருநாதர் சுசீந்திரன் சாரின் பெயரைக் காப்பாற்றும் வகையில் படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். லியோ சிவக்குமாரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
குறிப்பாக ஃபீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் படத்தின் ஆக்ஷன் உணர்வுக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளன. வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் பல ஆச்சரியங்களும் சிறப்பான தருணங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் பேசியதாவது,
“நான் நீண்ட காலமாக மேடை நாடகங்களில் நடித்து வந்தவன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. ஆனால் பல முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் கனவைத் தள்ளி வைத்துவிட்டு மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டேன். இந்தச் சூழலில் ‘டெலிவரி பாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் லியோ சிவக்குமார் என்னை நேரில் சந்தித்து நடிக்க அழைத்தபோது, என் நீண்ட நாள் கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஒரு கலைஞனாக அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது சினிமா தயாரிப்பு குறித்து எனக்கு பெரிய அனுபவம் இல்லை. ஆனால் எனது நண்பர்கள் அனைவரும் எனக்குப் பக்கபலமாக நின்று உதவினார்கள். குறிப்பாக சசிகுமார், செந்தில் ராஜா, அரசர் மணி, செந்தில் மாமா, ஈஸ்வர் தமிழரசு உள்ளிட்ட நண்பர்கள் இந்தப் படம் உருவாக முழு ஒத்துழைப்பையும் அளித்தனர். எங்கள் பகுதியில் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்வது பெரிய சவாலாக இருந்தாலும், பலருடைய கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம். எனது அரசியல் தலைமையும் இந்தப் பயணத்திற்கு ஆதரவளித்தது.
லியோ சிவக்குமாரை ஒரு சகோதரனாகவே பார்க்கிறேன். அவர் இந்தப் படத்திற்காகப் பட்ட கஷ்டங்களை அறிவேன். இயக்குநர் நானி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடித்த இளம் கலைஞர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இன்னும் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,
“லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக உழைத்துள்ளார். அவருக்கு இந்தப் படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். டிரெய்லரைப் பார்த்ததும் படம் மீதான ஆர்வம் ஏற்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு ‘நான் மகான் அல்ல’ படத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகியிருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் நானி முழுமையான விறுவிறுப்பான கமர்ஷியல் படத்தைக் கொடுத்துள்ளார்.
ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் அவரது குழுவினர் அமைத்துள்ள சண்டைக்காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவும் பிரமாதமாகவும் உள்ளன. இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளன. துஷ்யந்த், பிரிகிடா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக துஷ்யந்தின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் அவர்களும் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது.
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அதிகமான படங்கள் வெளியாவதைத் தவிர்க்க தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரு சில படங்கள் வெளியாகும் தேதியில் பல படங்கள் போட்டியிடுவது அந்தப் படங்களின் வெற்றியையும் பாதிக்கக்கூடும். அதேபோல், கண்ணன் ரவி போன்ற தயாரிப்பாளர்கள் பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருவது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். ஊடக நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசியதாவது,
“‘டெலிவரி பாய்’ திரைப்படம் உண்மையிலேயே தரமான படைப்பாக வந்துள்ளது. ஒரு சாதாரண ரசிகனாகக் கதையைக் கேட்கும்போதே எனக்குப் புரிய வேண்டும், பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். இந்தப் படத்தைப் பார்த்ததும் ‘நான் மகான் அல்ல’ படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. ஒரு படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டுமென்றால் வில்லன் கதாபாத்திரமும் வலுவாக இருக்க வேண்டும். அதை இயக்குநர் நானி சிறப்பாகச் செய்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் இயக்குநரின் திறமை நன்றாக வெளிப்படுகிறது. பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் கடைசி வரை படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் இந்தப் படத்தில் நடித்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவரது நடிப்பும், உடல்மொழியும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஜெய் பிரகாஷ் அவர்களின் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. அமுதா லியோனி தனது மகனுக்காக எடுத்த முயற்சிகளும், அவருக்கு அளித்த ஆதரவும் பாராட்டுக்குரியவை. லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இவ்வளவு சிறப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அடுத்ததாக ஒரு காமெடி படத்திலும் நடிக்க வேண்டும்; அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. பிரிகிடா தனது கதாபாத்திரத்தை அழகாகச் செய்துள்ளார். இயக்குநர் நானி, தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் இன்னும் அடுத்தடுத்த பாகங்களாகத் தொடரும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால், இது சிறப்பாக வந்திருப்பதால் லியோ சிவக்குமாருக்கு இன்னொரு படத்தில் வாய்ப்பளிக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்தப் படத்தைப் படக்குழுவினர் நல்ல முறையில் வெளியிட வாழ்த்தினேன். சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். பத்திரிகை நண்பர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”
திண்டுக்கல் லியோனி பேசியதாவது,
“முதலில் இந்தப் படத்தைச் சரியான நேரத்தில் தயாரித்து எங்களுக்குப் பக்கபலமாக நின்ற எனது அன்புச் சகோதரர் மாதேஸ்வரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற திருக்குறளுக்கு உதாரணமாக, இக்கட்டான நேரத்தில் உதவிக்கு வந்த உண்மையான நண்பர் அவர். இயக்குநர் நானிக்கும் லியோ சிவக்குமாருக்கும் இடையே இருக்கும் புரிதலும், அவர்களது நீண்டகால உழைப்பும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒரு தாய் தனது மகனுக்குச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் நானி அழகாகக் காட்டியிருக்கிறார். ராதிகா சரத்குமார் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் உயிராக அமைந்துள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக சண்டைக்காட்சிகளும் அவற்றுக்கான பின்னணி இசையும் மிகவும் அருமையாக உள்ளன. துஷ்யந்த், பிரிகிடா உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். லியோ சிவக்குமார் நடிகராக மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்புப் பணிகளிலும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார். ஒரு தந்தையாகவும், இந்தப் படத்தின் ரசிகனாகவும் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
எனது அன்புச் சகோதரர் கண்ணன் ரவி, பலருக்கும் உதவி செய்து வருபவர். எனது குடும்பத்திற்குத் தேவைப்பட்ட மருத்துவ உதவியைக்கூட சரியான நேரத்தில் செய்து கொடுத்தவர். அவரைப் போன்ற மனிதர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்குப் பெரிய பலம். இந்தப் படத்தின் மையக்கருத்து நன்றி மறக்காமல் வாழ வேண்டும் என்பதுதான். ஒருவரிடம் உதவி பெற்றால், அதை நினைவில் வைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற அழகான கருத்தை இயக்குநர் நானி கதையின் வழியாகச் சொல்லியிருக்கிறார். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பண்பை வலியுறுத்தும் திரைப்படம் இது. பலருடைய உழைப்பில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் படத்தின் நல்ல அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் ஆதரவில்தான் இந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. நன்றி.”
ஒரு மகன் தனது அம்மாவைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், அதனால் அவனது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும், எதிர்பாராத திருப்பங்களும்தான் படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளன. தாய் – மகன் பாசத்தை மட்டுமின்றி, மனிதர்களுக்குள் இருக்கும் மனிதநேயம், நன்றி மற்றும் நன்றிக்கடன் போன்ற உணர்வுகளையும் கதையுடன் இணைத்துச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.
படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில், லியோ சிவக்குமாரின் தாயாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர்களாக அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ். குமார், இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பாளராக ஆர். வசந்தகுமார், கலை இயக்குநராக பி. ஜெய் முருகன், சண்டைப் பயிற்சியாளராக ஃபீனிக்ஸ் பிரபு உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.
தாய் – மகன் பாசம், மனிதநேயம் மற்றும் நன்றியுணர்வு ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.