
“விஸ்பர்ஸ் ஆப் தி ரிவர்”
இயக்குநர் பேரரசு பாராட்டு!
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்கு ‘விஸ்பர்ஸ் ஆப் தி ரிவர்’ திரையிடப்பட்டது. நதிநீர் முக்கியத்துவத்தையும், தந்தை, மகன் உறவையும் இளைய தலைமுறையினருக்கு இந்தப்படம் எடுத்துக் காட்டுகிறது என, இயக்குநர் பேரரசு படக்குழுவினரை பாராட்டினார்.
ஒரு இளைஞன், நவீன மாற்றங்கள் தனது கிராமத்தின் மென்மையான சமநிலையை சீர்குலைக்கத் தொடங்கும் சூழலில், மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்புகிறான். இழப்புகளுக்கும், நினைவுகளுக்கும் மௌன சாட்சியாக மாறும் நதியின் கரையில், அவன் தனது அடையாளம், சொந்த மண் மீதான பற்று, மற்றும் அந்த நிலத்தின் மீதான தனது பொறுப்பு தொடர்பாக,
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான முரண்பாட்டை நதி எவ்வாறு தீர்த்து வைக்கிறது என்பதை உணர்த்துகிறது ‘விஸ்பர்ஸ் ஆப் தி ரிவர்’ திரைப்படம்!
மஞ்சுநாத் பை கதாநாயகனாக நடிக்கிறார். சபானா
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன்
பிரபாகர் குந்தர், பிரபாகர் கல்யாணி,
தயானந்த் ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
மஞ்சுநாத் பை கதை எழுதியுள்ளார். கே.பிரபாகரன், மஞ்சுநாத் பை இருவரும் திரைக்கதை, வசனம் அமைத்துள்ளனர். கே.பிரபாகரன் இயக்கியுள்ளார்.
எடிட்டிங் சசிகுமார்,
ஒளிப்பதிவு கே.சத்தியராஜ்,
இசை ரோஹித் பூஜாரி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். மீனாஸ் ஸ்டுடியோ சார்பில், ராதாகிருஷ்ணா பை தயாரிக்கிறார்.
டிசம்பர் 6ம் தேதி மக்கள் பார்வைக்கு வருகிறது ‘விஸ்பர்ஸ் ஆப் தி ரிவர்’.
@GovindarajPro