Rating 3.3/5
பிளடி பெக்கர்
இயக்கம் – சிவபாலன் முத்துக்குமார்
நடிகர்கள் – கவின், ரெட்டின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ்
இசை – ஜென் மார்ட்டின்
தயாரிப்பு – ஃபிலமெண்ட் பிக்சர்ஸ் – நெல்சன்
ஏமாற்றி பிச்சை எடுக்கும் பிச்சைகாரராக உள்ள ஒருவன், ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்று விடுகின்றார். பங்களாவிற்குள் சென்று உள்ளே மாட்டிக் கொள்கின்றார். அங்கு ஏற்கனவே சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட ஒருவனின் உடலை துண்டுதுண்டாக வெட்டுவதைப் பார்த்து விடுகின்றார். ஆனால் அந்த பிச்சைக்காரன் கண்ணுக்கு ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் ஆவி தெரிகின்றது. சொத்துக்கு ஆசைப்பட்டவர்கள், இறந்தவருக்கு பதிலாக, கவினை நடிக்கச் சொல்லுகின்றார்கள். ஆனால் அவனையும் கொலை செய்யத் திட்டமிடுகின்றார்கள். இதில் இருந்து காப்பாற்ற பங்களா குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணும் முயற்சி செய்கின்றார்கள். இதிலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கவனத்தினை ஈர்த்த நடிகராக வலம் வருகின்றார். இவரது கடைசி இரண்டுப் படங்களான டாடா மற்றும் ஸ்டார் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு படங்களிலும் சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பாக ஒர்க்-அவுட் ஆனதால், கவினுக்கு அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த இரண்டு படங்களும் கதையாகவும் பாராட்டுகளைப் பெற்றதால், கவின் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்.
படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கின்றது. ஆனால் கவினின் நடிப்பினாலே முதல் பாதி நிரம்பி இருக்கின்றது என்பதைவிடவும், கவினின் நடிப்பினால்தான் முதல்பாதியை கடக்கவே முடிகின்றது. படம் முழுக்க டார்க் – காமெடியில் ரசிகர்களை திருப்திபடுத்த படக்குழு முயற்சி செய்துள்ளது. ஆனால் அது பல இடங்களில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. டார்க் காமெடி ஒர்க்-அவுட் ஆகாதது படத்தினை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. படம் முழுக்க புகைப்படங்களில் இருக்கும் ராதாரவி, கடைசி 10 நிமிடங்களுக்கு வருகின்றார். ஆனால் ராதாரவி வருவதற்கு முன்னரே படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
படத்தினை ஹேப்பி என்டிங்காக முடிக்கவேண்டும் என சேர்க்கப்பட்டுள்ள ராதாரவி காட்சிகள் நன்றாகவே இருந்தாலும், அது தேவையில்லாத காட்சிகளாகத்தான் தோன்றுகின்றது. படத்தினை ராதாரவி காட்சிகள் இல்லாமலே முடிந்திருந்தால் படம் இப்போது ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும். அறிமுக இயக்குநராக சிவபாலன் முத்துக்குமார் சிஸ்சர் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி அடித்துள்ளார்.
கவினுக்கு போடப்பட்ட பிச்சைக்கார மேக்கப் அற்புதமாக இருந்தது, அதற்கு நல்ல மெனக்கெடல் செய்துள்ளனர் , சுஜித்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது,
இசை அமைப்பாளர் ஜென் மார்டின் இசை படத்திற்கு பெரிய பலம் மற்றும் பாராட்டுக்குரியது.
உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலக்கியுள்ள கவின் தனது நடிப்பில் செஞ்சுரி அடிக்க முடியவில்லை என்றாலும், டாடா, ஸ்டார்க்குப் பிறகு ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.
மொத்தத்தில் இந்த ” பிளடி பெக்கர் ” குடும்பத்துடன் பார்க்க சிறப்பான படம்
Rating 3.3/5