Blue star படம் எப்படி இருக்கு?

Blue star

இயக்கம் – எஸ். ஜெயக்குமார்
நடிகர்கள் – அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன்
இசை – கோவிந்த் வசந்தா
தயாரிப்பு – நீலம் புரொடெக்‌ஷன்ஸ்

ஒரு ஊரில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது, அந்த ஊரில் உள்ள மக்கள் இரண்டு தெருவாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் , அதில் ஒன்று ஊர்த்தெரு மற்றொண்டு காலணித்தெரு , இந்த இரு தெருவில் உள்ளவர்களுக்கும் கிரிக்கெட்டால் என்ன பிரச்சினை வருகிறது , அதை எப்படி எதிர் கொள்கின்றனர், பின் பொது அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் இவற்றை எவ்வாரு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை

இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் அதன் வசனங்களினாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் சில பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது , எனினும் படத்தில் பாடல் காட்சிப் படுத்திய இடங்கள் அழகாகப் பொருந்தியுள்ளது . கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது, பின்னணி இசைக்கென தனி மெனக்கெடல் செய்துள்ளார். படத்தில் சிறிதாக வரும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது,.பகவதி பெருமாள் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். திரைக்கதைக்கு ஏற்ற வசனங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றது. அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் எதார்த்தமாக இருந்தது.

படத்தின் மூலக்கருவான கிரிக்கெட் சம்பந்தப் பட்ட காட்சிகளை இயக்குனர் நன்றாகவே காட்சி படுத்தியுள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த படம் ரசிக்கும் படியாக இருக்கும். கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்குநர் தான் நம்பும் அரசியலை சிறப்பாக எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் காட்டியுள்ளார். இதற்கு முன்னர் வந்த ஊர் தெரு மற்றும் காலணி தெரு அரசியலை பேசிய படங்கள் இவர்களுக்கு இடையேயான பிரச்னைகளை பேசியிருந்தது. காலணி தெருவில் இருப்பவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்கள் குறித்து எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அது ஊர் தெருவில் இருப்பவர்களுக்குப் புரிந்ததா என்ற கேள்விக்குறி இருந்துவந்தது. ஆனால் இந்த படத்தில் ஊர் தெருவில் உள்ள சாந்தனுக்கு ஏற்படும் அவமானம் அதனால் சாந்தனுக்குள் ஏற்படும் மாற்றம் ரசிக்கும்படியாக இருந்தது. சாந்தனு இந்தப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படம் அவரை ரசிகர்கள் மனதிற்கு அருகில் கொண்டு செல்லும்.

படத்தில் அரசியல் தலைவர்கள் பலரை நினைவு கூறும்படி அடையாளப்படுத்துள்ளனர், குறிப்பாக பூவை மூர்த்தி கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது கேள்வியை எழுப்புகின்றது. இறுதிக் கட்டத்தில் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் படத்தின் வேகத்தை திரைக்கதையில் இன்னும் சில மெனக்கெடல் செய்திருக்கலாம் .

மொத்தத்தில் கிரிக்கெட் மற்றும் பொது வாழ்வில் நடக்கும் அரசியலை காதல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *