தேவரா படம் எப்படி இருக்கு?

தேவரா

இயக்கம் – கொரட்டல சிவா
இசை – அனிருத்
நடிகர்கள் – ஜுனியர் என் டி ஆர், ஜான்வி கபூர்,சையஃப் அலிகான் ,கலையரசன்
தயாரிப்பு – நந்த முரி கல்யாண்ராம்

இந்தியாவில் உலககோப்பை நடக்க, ஒரு முன்னெச்சரிக்கை ஆக பெரிய கேங்ஸ்டர்களை அடக்க ஒரு போலிஸ் குரூப் தயாராக, எத்தி என்ற கேங்ஸ்டரை தேடி செங்கடல் செல்ல, அங்கு பிரகாஷ்ராஜ் தேவரா கதையை அந்த போலிஸ் குரூப்பிடம் சொல்ல ஆரம்பிக்கிறார், தேவரா 4 ஊர் மக்களுக்கு தலைவன் போல் இருந்தாலும், கடலில் முறைகேடாக வரும் ஆயுதங்களை அரசியல்வாதி ஒருவருக்கு எடுத்து தருகிறார்.அவருடன் இரண்டு நண்பர்கள் அவருக்கு உதவியாக இருக்கின்றனர், இப்படி இருக்க ஒரு கட்டத்தில் தான் செய்யும் வேலை மிக மோசமானது, இதனால் நம் மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்று வேலையை நிறுத்த சொல்கிறார்.ஆனால், பணத்தாசையால் உடன் இருந்த ஒருவன் தேவராவை கொல்ல முயற்சிக்க, தேவாரா தன்னை கொல்ல வந்தவர்களை எல்லாரையும் கொன்று மாயமாகிறார், தேவரா எங்கே, எங்கே போனார் இந்த நாஷ வேலைகளை தொடர்ந்து தடுத்தாரா என்பதே மீதிக்கதை.

ஜுனியர் என் டி ஆர் RRR படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள தேவரா அவருக்கு கொடுத்த அப்பா-மகன் ரோலில் மாஸ் காட்டியுள்ளார். அதிலும் அப்பாவாக வரும் தேவாரா குற்ற உணர்வுடன் ஆரம்பத்தில் வேலை செய்தாலும், அவர் மாறும் இடம் அதிலிருந்து அந்த ஊருக்காக அவர் செய்யும் வேலைகள் என மகனை மிஞ்சி ரசிகர்கள் மனதில் நிற்கின்றார்.
வீரனின் மகன் கோழையாக மகன் NTR-ம் ரசிக்க வைக்கிறார். கடல் சார்ந்த கதை என்பதால் ஆரம்பத்திலேயே கப்பலில் கொள்ளை அடிக்கும் காட்சி ஆக்‌ஷன் விருந்து தான். அதோடு ஆயுதங்களை தங்கள் ஊருக்கு எடுத்து செல்ல வைக்கப்படும் சண்டைக்காட்சி இரத்த ஓட்டம் தான். ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நிறைய விருந்து படையல் வைத்துள்ளனர்.

ஜான்வி கபூர் மயக்கும் அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார், தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், மற்ற முக்கிய கதாபாத்திரத்தில், சையஃப் அலிகான் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர், கலையரசன் தற்போது அனைது தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கும் ஒரு பிரபல நடிகராகி விட்டார்,

இந்த படத்தின் மறைமுக ஹீரோ அனிருத் தான், BGM தெறிக்க விட்டுள்ளார், படத்தில் இசைக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை, அனிருத் மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக மெனக்கெடல் போட்டுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது, திரையரங்கில் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது, அதிலும் NTR-ம் ஜான்வியும் இனைந்து ஆடியுள்ள பாடல் மிகச்சிறப்பு,
ரத்னவேலு ஒளிப்பதிவு ட்ரைலரில் செட் என்பது தெரிந்தாலும் படத்தின் ஓட்டத்தில் ஒன்றி போகிறது,

படத்தின் முதல் பாதி கதை அமைப்பு தேடல் ஆக்ஷன் என பரபரப்பாக நகர்ந்து விடுகிறது, இரண்டாம் பாதி மொத்தத்தையும் NTR தனது நடிப்பால் தாங்கியுள்ளார் , மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டோம் என்ற குற்ற உணர்சியில் இருந்த் ஒருவன் மக்களை பாதுகாக்க போராடுகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை, கதை சற்று பழசாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் இசை படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது,இயக்குனர் கொரட்டல சிவாவின் படத்தில் இருக்கும் அத்தனை அம்சமும் படத்தில் இருக்கிறது,

மொத்தத்தில் இந்த ”தேவரா” ஒரு திரை விருந்து

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *