
புதுமையான சைக்கலாஜிகல் டிராமா திரில்லர் “கேம் ஆஃப் லோன்ஸ்” அக்டோபர் 17 திரைக்கு வருகிறது!!
JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.
தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக் லெஸ்லி கூறியதாவது..,
லாக்டவுன் காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்கு தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன், ஏஐ யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் என குறும்படம் எடுத்தேன், அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது. லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம். ஆன்லைன் லோன் வாங்குவது இன்றைய காலகட்டத்தில் மிக மிக எளிதானது ஆனால் அதை திருப்பிக்கட்டுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. அப்படி ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை ஒரு நாளில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்தப்படம். ஒரு கதைக்குப் பாடல்களோ காமெடியோ முக்கியமில்லை. மக்களைக் கதைக்குள் இழுக்கும் அவர்கள் அதை தங்களோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் அம்சம் இருந்தாலே போதும். எப்போதும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் முக்கியம். குறைந்த கதாப்பாத்திரங்கள் என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடன் வாங்கியிருப்பார்கள் இந்தப்படம் பார்க்கும் போது இதை தங்கள் கதையாக உணர்வார்கள். கண்டிப்பாக மக்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இப்படம் இருக்கும். என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாகக் கலக்கியுள்ளார். எஸ்தர், ஆத்விக் உடன் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜோ கோஸ்டா அருமையான பின்னணி இசையைத் தந்துள்ளார். சபரி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் சென்சார் செய்யப்பட்டு U / A சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
தொழில் நுட்பக் குழு
இயக்கம் – அபிஷேக் லெஸ்லி
இசை – ஜோ கோஸ்டா
ஒளிப்பதிவு – சபரி
எடிட்டர் – பிரதீப்
ஆர்ட் டைரக்டர் – சஜன்
சவுண்ட் டிசை கீதா குரப்பா
தயாரிப்பாளர் – ஜீவானந்தம்
தயாரிப்பு நிறுவனம் – JRG Productions
இயக்குநர் குழு – சிவா சுப்பிரமணியம், வினோ, கிளாட்சன்.
PRO, R.மணி மதன்.