🎬 ‘பைசன்’ – திரைப்பட விமர்சனம் 🐃

🎬 ‘பைசன்’ – திரைப்பட விமர்சனம் 🐃

இயக்கம்: மாரி செல்வராஜ்
நடிப்பு: த்ருவ் விக்ரம், பசுபதி, ஆமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள், அறுவி மதன், அனுராக் அரோரா
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: சமீர் நாயர், தீபக் சேகல், பா. ரஞ்சித், அதிதி ஆனந்த்

🐃 ‘பைசன்’ – இரத்தம், வலி, எதிர்ப்பு!

90களின் தென் மாவட்ட சமூக மோதல்களில் சிக்கிய இளைஞர்களின் திசைமாறிய கனவுகள், தடைகளால் நொறுங்கிய வாழ்க்கை — அதனுள் ஒரு கபடி வீரனின் இரத்தமும் சதையுமாகிய போராட்டம் தான் ‘பைசன்’.

தடைகளை தாண்டி எழும் ஒரு கபடி வீரனின் போராட்டத்தை, தனது மண், மக்கள், உண்மையோடு இணைத்து சொல்லியிருக்கும் மாரி செல்வராஜ், அதற்கு உயிர் கொடுத்திருக்கும் த்ருவ் விக்ரம் – இருவரும் சேர்ந்து திரையில் ஒரு உணர்ச்சி வெடிப்பு உருவாக்கியிருக்கிறார்கள்! 🐃🔥💥 ‘பைசன்’ – வலியிலிருந்து வெற்றிக்கான பயணம்!

“பைசன்” என்ற பெயருக்கேற்ப, த்ருவ் விக்ரம் தனது உடலை அப்படியே அந்த விலங்கின் சக்தி, சத்தம், சுழற்சி போல தயார் செய்திருக்கிறார். கடுமையான பயிற்சி, கட்டுப்பாடு, உடல் மொழி — அனைத்திலும் அவர் ஒரு real athlete மாதிரி தோன்றுகிறார். கபடி மைதானத்தில் நிற்கும் ஒவ்வொரு ஷாட்டிலும் அந்த உறுதி தெரிகிறது.

பள்ளிப் பருவம் முதல் வீரனாகும் வரை:
த்ருவ் விக்ரம் இரண்டு வாழ்க்கை நிலைகளிலும் தன்னை பிரித்துக் காட்டியிருப்பது அபாரமானது.
பள்ளிப் பருவத்தின் நெகிழ்ச்சியையும், பின்னர் வீரனாக களம் காணும் உறுதியையும் உடல் மற்றும் முகபாவனைகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த transformation பார்வையாளரை வியக்க வைக்கிறது.

🎭 பசுபதி –

துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, தனது குரல் அல்ல, கண்கள் மூலமாகவே கதையை சொல்லுகிறார். ஒவ்வொரு பார்வையிலும் — ஒரு தந்தையின் பதற்றம், பெருமை, பயம், நம்பிக்கை — அனைத்தும் கலந்திருக்கிறது.
அவரின் மௌனமே ஒரு உரையாடலாக மாறி, மகனின் போராட்டத்தையும் தந்தையின் உள் காயத்தையும் நம்மிடம் ஆழமாக கடத்துகிறது.

நாயகியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், துருவின் வாழ்க்கையில் ஒளி சேர்க்கும் மென்மையான உணர்ச்சியாக மிளிர்கிறார்.
அவரின் நிழலாகவும், நம்பிக்கையாகவும் நிற்பவர் ரஜிஷா விஜயன் — சகோதரியின் அன்பையும் வலியையும் நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறுவி மதன், ஆசிரியராக கதையில் மனிதநேயத்தின் குரலாக திகழ்கிறார்.
இயக்குநர் ஆமீர் மற்றும் லால், தங்களின் அனுபவம் கலந்த ஆழமான நடிப்பால் கதையை உறுதியாக நிறுத்துகிறார்கள்.

அனைவரும் சேர்ந்து, ‘பைசன்’ உலகை உண்மையாக உணர வைக்கும் வகையில் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார்கள். 🌾✨

🎵 ‘பைசன்’ – இசை 🔥

நிவாஸ் கே. பிரசன்னா பாடல்கள் திரையரங்கில் கைதட்ட வைக்கும், விசில் அடிக்க வைக்கும் அளவுக்கு சூப்பர் ஹிட்! 💥
மண், மக்கள் கலாச்சாரம், களப்பயணம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டம் ஊட்டுகிறது.
இந்த mass music தான் படம் முழுவதும் energy களஞ்சியம் போல செயல்படுகிறது! 🐃🎶

ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே, திரைக்கு தென் மாவட்ட நிலப்பரப்பின் உணர்வை நேரடியாக கொண்டு வந்துள்ளார். ஒளி, கோணம், சாயல்கள்—all காட்சிகளை உயிரோட்டமாக மாற்றி, பார்வையாளர்கள் முழு அனுபவத்தில் மூழ்க வைக்கின்றனர்.

🎬 ‘பைசன்’ – மண், கோபம், போராட்டம்! 🐃

எழுதி இயக்கிய மாரி செல்வராஜ், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிலப்பரப்பில் நிகழ்ந்த சமூக மோதல்களின் கோபம், வலி மற்றும் அதனால் உருவான பாதிப்புகளை நுண்ணிய குறியீடுகளின் மூலம் பார்வையாளர்களின் மனதில் பதித்துள்ளார். தனது தனித்துவமான கதை சொல்லல், காட்சிகளின் அமைப்பு மூலம் படம் முழுவதும் மனம் பதிக்கும், கவனம் ஈர்க்கும் அனுபவமாக மாறியுள்ளது.

சாதி, சமூக பிரிவுகள் போன்ற காரணங்களால் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் ஏற்படும் வன்முறை சம்பவங்களை பேசினாலும், மாரி செல்வராஜ் திரைக்கதை வடிவமைப்பில் ஒவ்வொரு சமூகத்தையும் இணைக்கும் முறையை கையாள்கிறார்.
இங்கு ஒரு போராட்டமும், ஒரு மரியாதைக்காக நிலைத்திருக்கும் போராட்டமும், கடந்த காலம் முதல் இன்றைய சமூக பாதிப்புகள் வரை – எல்லாவற்றையும் படத்தில் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.

💥 மொத்தத்தில், ‘பைசன்’ மிரட்டுகிறது – உண்மை, கோபம், மனித உணர்ச்சி அனைத்தையும் திரையில் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த படம்!

Rating 3.9| 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *