
இசையமைப்பாளர் சபேஷ் மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் அன்புத் தம்பியும், திரை இசை கலைஞர்கள் சங்கத் தலைவரும், திரைப்பட இசை அமைப்பாளரும் ஆகிய சபேஷ் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகிறது. விழிகளில் கண்ணீரைக் கூட்டுகின்றது. சபேஷ் முரளி என்று ரெட்டையராய் இருந்து, இசையமைத்தாயே, இன்று எங்கே போய் இசையமைக்க இந்த உலகத்தை விட்டு ஒத்தையாய் சென்று விட்டாய். எங்கள் உள்ளங்களை எல்லாம் வாட்டி விட்டாய். நீ இசையமைப்பாளராய் இருந்து பேஷ், பேஷ் என்று போட வைத்த சபேஷ், நீ சட்டென்று மறைந்தது ஏனோ. எங்களுடைய விழிகளில் கண்ணீர் நிறைந்தது ஏனோ. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், இசை குடும்பத்தாருக்கும், திரையுலகத்தாருக்கும் என் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு,
திரைப்பட இயக்குனர்,
நடிகர், இசை அமைப்பாளர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர்,
மற்றும் தமிழ்நாடு திரைப்படத்
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்.