
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!
பண்பட்ட பாரம்பரியமிக்க பெரும் புகழ் வாய்ந்த மனோரஞ்சித நடிப்பரசி நடிகை மனோரமாவின் மகனும் நடிகரும் என் நண்பருமான பூபதி அவர்களுடைய மறைவு என் மனதை வாட்டியது. பூமணம் படைத்த என் நண்பர் பூபதிக்கு என் கண்ணீர் பூக்களால் அஞ்சலி செலுத்துகின்றேன் அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும் கலை உலகத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு, இயக்குனர், நடிகர்,
இசையமைப்பாளர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர் மற்றும்
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்
சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.