“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர்.

புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துள்ளது. நடிகர்கள் டிமிட்ரியஸ் சுஸ்டெர்- கோலோமடாங்கி மற்றும் எல்லி ஆகியோருக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று.

‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ இந்திய திரையரங்குகளில் நவம்பர் 7, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *