’கும்கி 2’ படம் எப்படி இருக்கு?

’கும்கி 2’ திரைப்பட விமர்சனம்

🎬 நடிகர்கள் (Casting):

மதி

ஸ்ரீதா ராவ்

ஆண்ட்ரூஸ்

அர்ஜுன் தாஸ்

ஆகாஷ்

ஹரிஷ் பேரடி

ஸ்ரீநாத்

🎥 இயக்கம் (Directed By):

பிரபு சோலமன்

🎶 இசை (Music By):

நிவாஸ் கே. பிரசன்னா

🏢 தயாரிப்பு (Produced By):

ஜெயந்திலால் கடா

தவால் கடா

மலைப்பகுதி கிராமத்தில் வாழும் மதி, சிறுவயதில் பள்ளத்தில் சிக்கியிருந்த குட்டி யானையை காப்பாற்றுகிறான். அந்த தருணத்திலிருந்து யானைக்கும் மதிக்கும் இடையே ஆழமான பாசம் உருவாகிறது. இருவரும் சகோதரர்கள் போல வளர்கிறார்கள்.

ஆனால் ஒரு நாள் யானை திடீரென்று மாயமானதால் மதி மன அழுத்தத்தில் யானையைத் தேடி அலைகிறான். ஆசிரியரின் ஆலோசனையால் அவர் கல்லூரி படிப்புக்குப் போகிறார்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு ஊருக்கு திரும்பும் போது யானை பற்றிய முக்கிய தகவல் கிடைக்கிறது. அந்த தடத்தைப் பிடித்து தேடி செல்லும் மதிக்கு — தனது யானை மீண்டும் கிடைக்கிறதா? யானை ஏன் மாயமானது? — என்பதே கும்கி 2 படத்தின் மையக்கதை.

அறிமுக நடிகர் மதி, முதல் படத்திலேயே மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறார். யானையை நேசிக்கும் இளைஞனாக அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் அனைத்தும் இயல்பாகவும், மனதில் நிற்கும்படியாகவும் இருக்கிறது. திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கதைக்கு வலு சேர்க்கிறது.

சில காட்சிகளில் மட்டும் வரும் ஷ்ரிதா ராவ், நண்பனாக ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ், ஹரிஷ் பெராடி உள்ளிட்டோர் — அனைவரும் தங்களுக்கான வேடங்களை துல்லியமாக செய்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே. பிரசன்னா இசை படத்துக்கு பெரிய பலம். மெலோடி பாடல்கள் மனதை கவர, பின்னணி இசை யானை–மதி பாசத்தை அழகாக உயர்த்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் மலை, காட்டுப்பகுதி, அருவி காட்சிகளை அசர வைக்கும் அளவுக்கு அழகாகப் பதிவு செய்துள்ளார். சில ஷாட்கள் கார்ட்போஸ்ட் போல் கண்களுக்கு முன்னால் ஓடுகிறது.

படத்தொகுப்பாளர் புவன், கதைசொல்லலின் ஓட்டத்தை தடை இல்லாமல் கொண்டு சென்று சிறப்பாக இணைத்திருக்கிறார்.

இயக்குநர் பிரபு சாலமன், யானை–மனிதன் பாசத்தை இன்னுமொரு முறை உணர்ச்சிகரமாக சொல்லி மக்களின் மனதைத் தொட்டிருக்கிறார். குட்டி யானையுடன் வரும் காட்சிகள் குழந்தைத்தனமான அழகை தர, பெரிய யானையுடன் வரும் காட்சிகள் சக்திவாய்ந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

குட்டி யானை–மதி நட்பு, அழகான காட்சிப்பதிவு, நல்ல இசை—மொத்தமாக படம் ஒரு சாந்தமான, உணர்ச்சி நிரம்பிய அனுபவத்தை தருகிறது.

மொத்தத்தில் — ‘கும்கி 2’, பாசம், இயற்கை, உணர்ச்சி எல்லாம் சேர்ந்து நல்ல அனுபவத்தை தரும் அழகான படம்.

ரேட்டிங்: 3.3/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *