தீயவர் குலை நடுங்க’ படம் எப்படி இருக்கு?

‘தீயவர் குலை நடுங்க’ – விமர்சனம்

Casting: Arjun, Aishwarya Rajesh, Abhirami Venkatachalam, Praveen Raja, Logu NPKS, Ram Kumar, Thangadurai, Baby Anikha, Prankster Rahul, Priyadarshini, Syed, G.K. Reddy, P.L. Thenappan, O.A.K. Sundar, Vela Ramamoorthy, Padman
Directed By: Dinesh Lakshmanan
Music: Bharath Aaseevagan
Produced By: GS Arts – G. Arulkumar

முகமூடி அணிந்த மர்ம நபரின் கொடூரமான கொலையால் படம் துவங்குகிறது. பிரபல எழுத்தாளரின் மரணம் காவல்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்த, அந்த வழக்கை தீர்க்க பொறுப்பெடுப்பது அதிகாரி அர்ஜூன்.

மற்றொரு கோணத்தில், ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண தளத்தில் காதலர் தேடும் பிரவீன் ராஜா மீது விருப்பம் கொள்கிறார். இருவரும் நெருக்கமாகும் அந்தப் பயணத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்மமான சம்பவம் விசாரணைக்கு புதிய திருப்பத்தை கொடுக்கும்.

அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, அது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். யார் அந்த மர்ம நபர் ? , கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் என்ன சம்மந்தம் ?, ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாரா ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை பரபரப்பாக சொல்வதே ‘தீயவர் குலை நடுங்க’.

நடிப்பு

அர்ஜூன் – போலீஸ் சீருடை இல்லாமலே, நடிப்பால் சீருடை weight-ஐ எடுத்துக் காட்டுகிறார். புலனாய்வின் logic, intensity, அட்டகாசமான action – ரசிகர்கள் கைகொட்டும் வகையில்.

ஐஸ்வர்யா ராஜேஷ் – சஸ்பென்ஸில் மிதக்கும் unpredictable கதாபாத்திரம். எப்போதும் போல, உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி மெருகூட்டுகிறார்.

அனிகா – ஆட்டிசம் கொண்ட சிறுமி வேடத்தில் மிக இயல்பான நடிப்பு. படம் முழுவதும் மனதில் நிற்கும் பதிவை வைக்கிறாள்.

ப்ரவீன் ராஜா முதல் வேல்ராமமூர்த்தி வரை—ஒவ்வொருவரும் கதாபாத்திரத்துக்கேற்ற casting.

தொழில்நுட்பம்

இசை – Bharath Aaseevagan
பாடல்கள் ok, ஆனால் பின்னணி இசை கதையின் வேகத்தை தூக்கிவிட்டிருக்கும்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு
முதல் ஷாட்டிலேயே படம் ஒரு வேறு லெவலுக்கு போகும். குறிப்பாக லிப்ட் action scene – theatre-la whistle வர வைக்கும் அளவு.

Editing – லாரன்ஸ் கிஷோர்
கிரைம் சஸ்பென்ஸ் ஜானரின் tempo-வை சரியாக பிடித்து கதையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

இயக்கம்

தினேஷ் லக்ஷ்மணன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுத்து, audience-ஐ first frame முதலே உள்மன அழுத்தத்துக்குள் இழுத்து விடுகிறார். ஒவ்வொரு scene-மும் “அடுத்து என்ன?” என்ற tension-ஐ உயிரோடு வைத்திருக்கிறது.

தீயவர் குலை நடுங்க – ஒரு solid crime suspense thriller!
படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.

Rating: ⭐ 3.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *