இந்தியன் பீனல் லாவ்’ (INDIAN PENAL LAW -IPL) திரைப்பட விமர்சனம்

இந்தியன் பீனல் லாவ்’ (INDIAN PENAL LAW -IPL) திரைப்பட விமர்சனம்

🎬 கிஷோர் – டிடிஎப் வாசன் – அபிராமி – குஷிதா கல்லாப்பு

🎥 இயக்கம் : கருநாநிதி
🎶 இசை : அஷ்வின் வினாயகமூர்த்தி
🏢 தயாரிப்பு : ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் – ஜி.ஆர். மிதன் கிருஷ்ணன்

சாட்சியங்களும் ஆதாரங்களும் ஒருவருக்கு எதிராக திரண்டுவிட்டால், அவர் குற்றவாளி என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டத்தின் பின்னணியில் — “குற்றம் செய்யாத ஒரு மனிதன் எப்படி குற்றவாளியாக மாற்றப்படுகிறார்?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டு நகர்கிறது ‘Indian Penal Law’.

கிஷோர் இந்தக் கதையில் உயிரோட்டத்தை ஊட்டுகிறார்.
காவல் நிலையத் துன்புறுத்தல்கள்—அவரின் கண்கள், உடல் மொழி—எல்லாம் பார்வையாளரை புண்படுத்தும் அளவு உண்மையானவை.

அறிமுகமானாலும், அவர் தனது role-ஐ நேர்மையாக செய்திருக்கிறார்.
வாசனின் trademark bike speed stunts படத்திலும் இருக்கிறது, ஆனால் குறிப்பிட்ட காட்சி பெரிய தாக்கம் கொடுக்கவில்லை.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார்.

திலீபன் தனது வேடத்தில் நன்றாக டெலிவர் செய்கிறார்.

ஜான் விஜய் வழக்கமான over-energy-யில் செல்லும்போது சில நேரங்களில் distraction.

அபிராமி, நரேன், போஸ் வெங்கட், சிங்கம்புலி—அனைவரும் role-க்கு வேண்டியதை neat-ஆக முடித்திருப்பது சாலச் சிறப்பு.

பாடல்களும், குறிப்பாக BGM, கதையின் துடிப்பை சரியாக பிடித்துக் கொண்டு செல்வது படத்தின் பெரிய plus.

📸 ஒளிப்பதிவு – எஸ்.பிச்சமணி
காட்சிகள் அழகாகவும்,
பைக் சேசிங் காட்சிகளில் அவர்கள் நிறைய வேலை செய்திருப்பது தெரியும், ஆனாலும் அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

✂️ படத்தொகுப்பு – பிரகாஷ் மாப்பு
கதை ஓடும் வேகத்தை நன்றாக வைத்திருக்கிறார்.
எங்கும் சலிப்பு அல்லது மெதுவான உணர்வு வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

🎬 இயக்கம் – கருணாநிதி
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, அதை ஒரு சுவாரஸ்யமான கற்பனை கதையாக மாற்றி, விறுவிறுப்பான திரைக்கதை உருவாக்கியிருக்கிறார்.
சிறை படுகொலைகள், அப்பாவி மக்களுக்கான அநீதி — இவற்றை நிஜத்துக்கு நெருக்கமாக காட்டியிருப்பது சிறப்பாகத் தெரிகிறது.

சில காட்சிகளில் வரும் பதட்டம், பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் வரவைக்கும்.

⚖️ தீர்ப்பு
‘Indian Penal Law (IPL)’ — வழக்கமான மசாலா படம் இல்லை.
உண்மைச்சம்பவ touch-உம், நல்ல நடிப்புகளும் சேர்ந்து உருவான ஒரு நேர்மையான நீதிமன்ற–குற்றப் படம்.

⭐ மதிப்பீடு : 3/5
ஒரு முறை பார்க்கத்தக்க, கதை மற்றும் நடிப்பு முக்கியமாக இருக்கும் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *