
’சாரா’ திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் :
சாக்ஷி அகர்வால், செல்லக்குட்டி, யோகி பாபு, ரோபோ சங்கர், விஜய் விஸ்வா, தங்கதுரை
இயக்கம் :
செல்லக்குட்டி
இசை :
கார்த்திக் ராஜா
தயாரிப்பு :
விஸ்வா ட்ரீம் வேர்ல்ட் – ஸ்ரீ பட்டவன்
கட்டிடத் துறையில் பொறியாளராக பணிபுரியும் சாக்ஷி அகர்வால், தனது நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் விஸ்வாவை காதலித்து வருகிறார். இருவரின் திருமணமும் நிச்சயமாகும் சூழலில், அதே நிறுவனத்தின் காவலாளியான ரோபோ சங்கர் சாக்ஷியை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
கட்டிடப் பொறியாளரான சாக்ஷி அகர்வால் – அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வா… காதல், திருமணம் என வாழ்கை இனிதாக செல்கும் நேரத்தில், நிறுவன காவலாளி ரோபோ சங்கர் சாக்ஷியை கொலை செய்ய முயல்கிறான்!
அதிர்ச்சி இன்னும் முடியல…
எல்லோருக்கும் கோமாளியாக தெரியும், ஒரு சாதாரண கட்டுமான தொழிலாளி – செல்லகுட்டி, இருவரையும் திடீரென்று கடத்திச் செல்கிறான்!
👉 ரோபோ கொலை முயற்சி…
👉 செல்லகுட்டி கடத்தல்…
👉 இதன் பின்னணி என்ன?
இந்த மர்மங்களுக்கு பதில் சொல்லும், சஸ்பென்ஸ் திருப்பங்கள் நிறைந்த பயணம் தான் ‘சாரா’! 🔥
சாக்ஷி அகர்வால் – கதையின் மையமாக நின்று, தன் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
விஜய் விஸ்வா – ஹீரோவாக எண்ட்ரி சூப்பர்… அதுக்கப்புறம் நிலைமை ஐயோ பாவம்!
ஆரம்பத்தில் கோமாளி போல வருகிற இயக்குநர்-நடிகர் செல்லகுட்டி, பிறகு எடுக்கும் விஸ்வரூபம் தான் படத்தின் ஹைலைட்!
🔥 ஒன் மேன் ஷோ
🔥 டிரெண்டாகும் மேனரிசம்
🔥 சோசியல் மீடியா நடிப்பு அரக்கனையும் மிஞ்சும் அளவிலான அலப்பறை
யோகி பாபு காட்சிகள் சிரிப்புக்கு கேரண்டி.
ரோபோ சங்கர், தங்கதுரை – காமெடி சப்போர்ட் ப்ளஸ்.
அம்பிகா, மிரட்டல் செல்வா – அனுபவ நடிப்பில் ஸ்ட்ராங்க்.
🎵 கார்த்திக் ராஜா – பாடல்களும் BGM-மும் பரவாயில்லை.
🎥 ஜெ. லக்ஷ்மன் குமார் – ஒளிப்பதிவு கதைக்கு துணை.
✂️ ஜான் ஆபிரகாம் – எடிட்டிங் கதையை சிதைக்காமல் காப்பாற்றியிருக்கிறது.
செல்லகுட்டி (டிரெக்டர்) – சஸ்பென்ஸ் + காதல் + நட்பு = கமர்ஷியல் பேக்கேஜ்.
டிரெக்ஷனில் சிறு தடுமாற்றம் இருந்தாலும்,
👉 ஒரு நடிகராக அவர் முழு வெற்றி!
💥 மொத்தத்தில், ‘சாரா’ – ஒரு நிஜமான “நடிப்பு அரக்கனை” அடையாளம் காட்டிய படம்!
⭐ ரேட்டிங்: 3/5