ஒத்த ஓட்டு முத்தையா படம் எப்படி இருக்கு?


ஒத்த ஓட்டு முத்தையா

இயக்கம் – சாய் ராஜகோபால்
நடிகர்கள் – கவுண்டமணி , யோகி பாபு , ராஜேஸ்வரி , சாய் ராஜ கோபால்
இசை – சித்தார்த் விபின்
தயாரிப்பு – சினி கிராஃப்ட் புரொடக்ஷன் – ரவிராஜா

ஒருவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு  மட்டும் வாங்கியதால், அவரை ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அனைவரும் அழைக்கின்றனர்,  அவரது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார். அவரின் தங்கைகள் காதலிப்பவர்களை, அண்ணன் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த தங்களது காதலர்களை சகோதர்களாக நடிக்க வைக்கிறார்கள். மற்றொரு புறம் மீண்டும் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயர்சியில் இறங்கும் நாயகனுக்கு சீட் கொடுக்காமல் அவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியவருக்கு கட்சி  சீட் கொடுத்து விடுகிறது. அதனால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிடும் அவர், தேர்தலில் வெற்றி பெற்றாரா?, அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்களா ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கவுண்டர்கள் வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தது. கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்துள்ள யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் நம்மை ரசிக்க வைக்கிறது,

மேலும் வாசன் கார்த்திக்,  அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால்,  டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரது வரிகளில் பாடல்களும், பின்னணி இசையும் புத்துணர்வை ஏற்படுத்தியது. எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால், கவுண்டமணியை வைத்துக்கொண்டு அரசியல் நையாண்டி செய்ய முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளார், கவுண்டமணி, யோகி பாபு  தமிழக அரசியல் சம்பவங்களை நையாண்டியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைத்துள்ளது, அதை இயக்குனர் நேர்த்தியாக கையாண்டுள்ளார்

மொத்தத்தில், ‘ஒத்த ஓட்டு முத்தையா’ சிந்திக்க வைக்கும் சிரிப்பு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *