
’ராஜா சாப்’ திரைப்பட விமர்சனம்
நடிப்பில் (Casting):
பிரபாஸ்
சஞ்சய் தத்
போமன் இரானி
மாளவிகா மோகனன்
நிதி அகர்வால்
ரித்தி குமார்
ஜரீனா வஹாப்
இயக்கம் (Directed by):
மாருதி
இசை (Music):
தமன் எஸ்
தயாரிப்பு (Produced by):
பீப்பிள் மீடியா ஃபேக்டரி
ஐவி என்டர்டெயின்மெண்ட்
தயாரிப்பாளர்கள் (Producers):
டி.ஜி. விஸ்வ பிரசாத்
கிருதி பிரசாத்
பல வருடங்களுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தாத்தாவின் தடங்களைத் தேடி பயணம் தொடங்குகிறார் பிரபாஸ். தேடல் ஒரு கட்டத்தில் அவரை கொண்டு சேர்ப்பது, மாயவித்தைகள், இருட்டு சக்திகள், பயங்கர சடங்குகள் என அனைத்தையும் கைக்குள் வைத்திருக்கும் அசாதாரண மனிதன் சஞ்சய் தத் முன்னால்.
அதிர்ச்சி என்னவென்றால்—அந்த பயங்கர மந்திரவாதிதான்… தன் சொந்த தாத்தா என்பதை பிரபாஸ் அறிந்து கொள்கிறார்.
தாத்தாவை நெருங்க நெருங்க, மறைக்கப்பட்ட உண்மைகள் ஒன்று ஒன்றாக வெடிக்கத் தொடங்குகிறது. குடும்ப பந்தம் vs இருண்ட சக்தி என்ற மோதல் தவிர்க்க முடியாததாக மாற, ரத்த உறவே பகையாக நிற்கும் சூழ்நிலை உருவாகிறது.
ஏன் இந்த மோதல்?
தாத்தா இப்படி மாற காரணம் என்ன?
இந்த இருண்ட உலகத்தில் சிக்கிக்கொண்ட பிரபாஸ் தன் வாழ்க்கையை எப்படி மீட்கிறார்?
திகில், ஃபேண்டஸி, ஆக்ஷன், உணர்ச்சி என அனைத்து மசாலாவையும் ஒரு பெரிய திரை அனுபவமாக கலக்கி வழங்கும் படம் தான் ‘ராஜா சாப்’ 🔥
பல வருடங்களுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது தாத்தாவை தேடி பயணம் தொடங்குகிறார் நாயகன் பிரபாஸ். அந்த தேடல் அவரை கொண்டு போய் நிறுத்துவது, மாய வித்தைகள், இருண்ட சடங்குகள், பயங்கர சக்திகள் என அனைத்தையும் கைக்குள் வைத்திருக்கும் ஒரு அச்சுறுத்தலான மனிதன் முன்.
அதிர்ச்சியின் உச்சமாக, அந்த பயங்கர மந்திரவாதி சஞ்சய் தத் தான்… தனது தாத்தா என்பதை பிரபாஸ் அறிந்து கொள்கிறார்.
தாத்தாவை நெருங்க முயற்சிக்கும் ஒவ்வொரு அடியிலும், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவர, குடும்ப பந்தமே பகையாக மாறும் நிலை உருவாகிறது.
ஏன் இந்த மோதல்?
இந்த இருண்ட உலகத்தில் சிக்கிய பிரபாஸ் எப்படித் தப்பிக்கிறார்?
இந்த திகில்–ஃபேண்டஸி மசாலா கலவையே ‘ராஜா சாப்’.
‘பாகுபலி’க்கு பிறகு பல்வேறு பிரமாண்ட முயற்சிகளில் ஈடுபட்ட பிரபாஸ், தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய மசாலா பாதைக்கு திரும்ப முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில், ரசிகர்களை மீண்டும் தனது பரிச்சயமான ஸ்டைலில் சந்திக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது.
கதை பலவீனமாக இருந்தாலும், பிரபாஸ் திரையில் தொடர்ந்து இருப்பது, அவருக்காக அமைக்கப்பட்ட அறிமுக காட்சிகளும் பில்டப்புகளும் ரசிகர்களுக்கான விசில் தருணங்களை உருவாக்க முயற்சிக்கின்றன. திரைக்கதையின் வேகம் சில இடங்களில் தளர்ந்தாலும், அவரது ஸ்டார் பிரசென்ஸ் படத்தை நகர்த்தும் முக்கிய பலமாகவே அமைகிறது.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் இருந்தும், ஒருவருக்குக் கூட அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. மூன்று பேரையும் ஒரு பேய் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாடல் காட்சிகளுக்கும், செட் பிராப்பர்ட்டிக்கும் பயன்படுத்தியிருப்பது மிகப்பெரிய குறை.
பிரபாஸின் தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய் தத், பாட்டியாக நடித்திருக்கும் சரினா வஹாப் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேர்த்தியாக செய்திருந்தாலும், அவர்களது திரை இருப்பு படத்திற்கு எந்த கூடுதல் பலத்தையும் சேர்க்கவில்லை. பொம்மன் இரானி வந்து போகிறார்… அவ்வளவுதான்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு மட்டும் பார்வையாளர்களுக்கு ஓரளவு ஆறுதல். தரமற்ற VFX காட்சிகளையும் கலர்ஃபுல்லாக காட்ட முயற்சி செய்திருப்பது அவரது உழைப்பை காட்டுகிறது.
தமன் எஸ் இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரீதியில் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசையின் அதிகப்படியான சத்தம் சில நேரங்களில் காதையே சோதிக்கிறது.
பழைய பாணி கதை, மெதுவாக நகரும் திரைக்கதை, தேவையில்லாத காட்சிகள் என நீக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருந்தும், மூன்று மணி நேரத்திற்கும் மேலான நீளத்தில் படத்தை தொகுத்திருக்கும் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவுக்கு இங்கு எந்த மன்னிப்பும் இல்லை.
எழுதி இயக்கிய மாருதி, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துச் சோர்ந்த பிரபாஸுக்கு, மூன்று நாயகிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கும் வேலையையே செய்திருக்கிறார்.
காதல், காமெடி, கவர்ச்சி, திகில், ஃபேண்டஸி என கமர்ஷியல் படத்துக்குத் தேவையான எல்லாமே இருந்தாலும், எதுவுமே ரசிக்கும்படி இல்லாதது தான் இந்த படத்தின் மிகப்பெரிய தோல்வி.
மொத்தத்தில்:
‘ராஜா சாப்’ – ரசிக்க தகுதியற்ற ஒரு மசாலா கலவை.
ரேட்டிங்: ⭐⭐✰✰✰ (2.7 / 5)